×

”10 நாள் தசரா பண்டிகையில் – கார் விற்பனை படுஜோர்”

பண்டிகை கால விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது. நவராத்திரி உள்ளிட்ட பத்து நாட்கள் தசரா பண்டிகை காலத்தில் மட்டும் பல்வேறு நிறுவனங்களின் கார் விற்பனை இருமடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு வரலாற்றில் வரலாறு காணாத விற்பனை சரிவை அனைத்து நிறுவனங்களும் கண்டன. பின்னர் படிப்படியாக மீள தொடங்கிய வாகன விற்பனை, கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நவராத்திரி சேர்த்து தசரா பண்டிகையின் 10 நாட்களில்
 

பண்டிகை கால விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது. நவராத்திரி உள்ளிட்ட பத்து நாட்கள் தசரா பண்டிகை காலத்தில் மட்டும் பல்வேறு நிறுவனங்களின் கார் விற்பனை இருமடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு வரலாற்றில் வரலாறு காணாத விற்பனை சரிவை அனைத்து நிறுவனங்களும் கண்டன. பின்னர் படிப்படியாக மீள தொடங்கிய வாகன விற்பனை, கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நவராத்திரி சேர்த்து தசரா பண்டிகையின் 10 நாட்களில் மட்டும் மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட கார் உற்பத்தி நிறுவனங்களின் விற்பனை படுஜோரான வளர்ச்சியை பெற்றுள்ளது.

குறிப்பாக மாருதி நிறுவனம், இந்த 10 நாட்களில் மட்டும், மொத்தம் 95 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் பார்க்கும்போது, 20 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. மற்றொரு முன்னணி நிறுவனமான ஹூண்டாய், இந்த 10 நாட்களில் மட்டும் 28 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதேப்போல மற்றொரு கொரிய நிறுவனமான கியா மோட்டார்ஸ், 11 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை தசரா பண்டிகையின் பத்து நாட்களில் மட்டும் விற்பனை செய்துள்ளது.

ஆடம்பர சொகுசு கார்களை விற்பனை செய்யும் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம், தசரா பண்டிகையின் பத்து நாட்களில் மட்டும் 550 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது இரண்டு இலக்க வளர்ச்சியாகும் என தெரிகிறது.

  • எஸ். முத்துக்குமார்