×

தமிழக இடைக்கால பட்ஜெட்: 11வது முறையாக ஓபிஎஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்!

இடைக்கால பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம். சென்னை கலைவாணர் அரங்கில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ். தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை முடித்த பிறகு கலைவாணர் அரங்கிற்கு புறப்பட்ட ஓபிஎஸ் சென்னை வாலாஜா சாலை கலைவாணர் அரங்கில் கூடியுள்ள சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓபிஎஸ் 11வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 15வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் என்பதால் பல்வேறு அறிவிப்புகள்
 

இடைக்கால பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்.

சென்னை கலைவாணர் அரங்கில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ். தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை முடித்த பிறகு கலைவாணர் அரங்கிற்கு புறப்பட்ட ஓபிஎஸ் சென்னை வாலாஜா சாலை கலைவாணர் அரங்கில் கூடியுள்ள சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓபிஎஸ் 11வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 15வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் என்பதால் பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் வருவதால் வாக்காளர்களை கவர பல்வேறு திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.

இதனிடையே பட்ஜெட் உரையை வாசிக்கும் முன்பே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இடைக்கால பட்ஜெட் தாக்கல் உரையின் போது, திமுக எம்.எல்.ஏ துரை முருகன் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.