×

தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்வு!

சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓபிஎஸ். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை பின்பற்றி, சிறப்பான நிர்வாகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தந்து வருகிறார்.எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உலக அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது என்றார்.தொடர்ந்து பேசிய அவர், நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ள நிதி பற்றாக்குறையை தவிர்க்க இயலாது. பொருளாதாரத்தில் எந்தவொரு பாதகமான தாக்கமும், ஏற்படாமலிருக்க பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என்றார். தமிழக இடைக்கால
 

சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓபிஎஸ். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை பின்பற்றி, சிறப்பான நிர்வாகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தந்து வருகிறார்.எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உலக அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது என்றார்.தொடர்ந்து பேசிய அவர், நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ள நிதி பற்றாக்குறையை தவிர்க்க இயலாது. பொருளாதாரத்தில் எந்தவொரு பாதகமான தாக்கமும், ஏற்படாமலிருக்க பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என்றார்.

தமிழக இடைக்கால பட்ஜெட் உரையின் சிறப்புக்கள் :

*தமிழக அரசின் கடன் சுமை அடுத்த ஓராண்டில் ₹5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும்

*தமிழக அரசின் கடன் சுமை தற்போது ₹4.85 லட்சம் கோடியாக உள்ள நிலையில், அடுத்த ஓராண்டில் ₹5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும்

*கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு ரூ.13,352 கோடி செலவிடப்பட்டுள்ளது

*ஜெயலலிதாவின் வேதாநிலையம் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது

*சுகாதாரத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ₹19,420 கோடி ஒதுக்கீடு

*உயர்கல்வித்துறைக்கு ரூ. 5478 கோடி ஒதுக்கீடு

*தமிழகத்தில் 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் உள்பட 12 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும்

*தமிழக அரசின் கடன்சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும்

*கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ₹6683 கோடி ஒதுக்கீடு

*அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும்