×

பட்ஜெட் 2021 – எரிவாயு மானியம் ரத்து செய்யப்படுமா ?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது என பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் வரும் பட்ஜெட்டில் பெட்ரோலிய பொருட்களுக்கான மானியங்களை நிறுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை வரும் நாட்களில் உயரும் என்கிற அச்சம் எழுந்துள்ளது . சர்வதேச அளவில் நடப்பாண்டில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களுக்கான விலை கடும் வீழ்ச்சியை கண்டது. இதையடுத்து , பெட்ரோலிய பொருட்களின் நுகர்வு குறைந்ததால் அரசுக்கு
 

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது என பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் வரும் பட்ஜெட்டில் பெட்ரோலிய பொருட்களுக்கான மானியங்களை நிறுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை வரும் நாட்களில் உயரும் என்கிற அச்சம் எழுந்துள்ளது .

சர்வதேச அளவில் நடப்பாண்டில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களுக்கான விலை கடும் வீழ்ச்சியை கண்டது. இதையடுத்து , பெட்ரோலிய பொருட்களின் நுகர்வு குறைந்ததால் அரசுக்கு மானிய சுமை அதிகரித்துள்ளது. எனவே இந்த நிதிச் சுமையை குறைக்கும் வகையில், நேரடி மானியங்களை குறைப்பதற்கு வரும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்கலாம். குறிப்பாக எரிவாயு இணைப்புக்கான மானியம் நிறுத்தப்படலாம் என தெரிகிறது

ஏற்கெனவே இந்தியாவில் மண்ணெண்ணெய்க்கு மானியத்தை அரசு நிறுத்திவிட்டது. ஆனால், பெட்ரோலிய நிறுவனங்களுக்கும், சமையல் எரிவாய் பெறும் மக்களுக்கு நேரடி மானியத்தையும் அளித்து வருகிறது. கடந்த ஆண்டில் பெட்ரோலிய பொருட்களுக்கான மானியம் 40 ஆயிரத்து 915 கோடி ரூபாயாக உள்ளது. அவற்றை வரும் ஆண்டில், பாதிக்கு பாதியாக குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது . பல மாநிலங்களில் ஏற்கனவே கடந்த மே மாதத்தில் இருந்து எரிவாயு மானியத்துக்கு மானியம் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளும் நிறுத்துவதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2019 – 20 காலகட்டத்தில் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் 60 டாலர் என்கிற அளவில் இருந்தது. அப்போது மத்திய அரசுக்கு கட்டுப்படியான விலை கிடைத்தது. பெட்ரோலியப் பொருட்களின் விலையும் சராசரியாக இருந்துவந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வு குறைந்தது. அதையடுத்து , சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி மிகப்பெரிய கண்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 20 டாலர் என்கிற அளவில் வீழ்ச்சி அடைந்ததால் மத்திய அரசுக்கும் வருவாய் குறைந்தது. அதேநேரத்தில் மக்களுக்கு அளிக்க வேண்டிய சமையல் எரிவாயு மானியம் மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. குறிப்பாக ஊரடங்கு காலத்தில் சமையல் எரிவாயு மானியம் தோராயமாக 20 சதவீதம் வரை உயர்ந்தது என விவரங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த நிலையில், அரசின் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, வரும் பட்ஜெட்டில் சமையல் எரிவாயு மானியம் நிறுத்தப்படலாம் என்கிற கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே விலைவாயு உயர்வு மக்களை வாட்டும் நிலையில், நிதியமைச்சர் என்ன முடிவெடுப்பார் என்பதை மக்கள் ஆர்வமுடன் கவனித்து வருகின்றனர்.