×

ராஜராஜ சோழனின் ஜன்ம நட்சத்திரம் – சதயம் நட்சத்திர பொதுப் பலன்கள்

24-வது நட்சத்திரமான சதயம், சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின் ஜன்ம நட்சத்திரமாகும். 24-வது நட்சத்திரமான சதயம், சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின் ஜன்ம நட்சத்திரமாகும். சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவராலும் விரும்பப்படுபவராக இருப்பார்கள். மற்றவர்களை வசீகரிக்கும் வகையில் தோற்றம் கொண்டிருப்பார்கள். அதிகாரத்திற்கு அடிபணியாதவர்களாக இருந்தாலும், அன்புக்கு அடிபணிபவர்கள். சதய நட்சத்திரக்காரர்கள் கடல் கடந்து பயணம் மேற்கொள்வதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள். ஆன்மிகத்தில் அதிக விருப்பம் கொண்டிருப்பார்கள். வாழ்வில் உயர்ந்த லட்சியத்தை வைத்திருக்கும் இவர்கள் அதை அடைய முழுமையாக பாடுபடுவார்கள்.
 

24-வது நட்சத்திரமான சதயம், சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின் ஜன்ம நட்சத்திரமாகும்.

24-வது நட்சத்திரமான சதயம், சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின் ஜன்ம நட்சத்திரமாகும்.

சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவராலும் விரும்பப்படுபவராக இருப்பார்கள். மற்றவர்களை வசீகரிக்கும் வகையில் தோற்றம் கொண்டிருப்பார்கள். அதிகாரத்திற்கு அடிபணியாதவர்களாக இருந்தாலும், அன்புக்கு அடிபணிபவர்கள். சதய நட்சத்திரக்காரர்கள் கடல் கடந்து பயணம் மேற்கொள்வதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள். ஆன்மிகத்தில் அதிக விருப்பம் கொண்டிருப்பார்கள். வாழ்வில் உயர்ந்த லட்சியத்தை வைத்திருக்கும் இவர்கள்  அதை அடைய முழுமையாக பாடுபடுவார்கள்.

சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க கூடியவர்களாக இருப்பார்கள். தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்களும் அப்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். பல மொழிகளைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். பிறர் உதவி கேட்டு வந்தால் தங்களால் முடிந்த உதவியைச் செய்வார்கள். சொன்ன சொல்லுக்கு மதிப்பு அளித்து அதை காப்பாற்ற நினைப்பார்கள். சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடன்பிறப்புகளுடன் மிகுந்த பாசம் காட்டுவார்கள். வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகளுக்கு மதிப்பு தருவார்கள். சதய நட்சத்திரக்காரர்கள் பேச்சாற்றல் மிக்கவர்களாக இருப்பதால், பேச்சிலேயே மற்றவர்களைக் கட்டிப் போடுவார்கள்.