×

நாற்பது வயதில் அரசாளும் யோகம் யாருக்கு ?

ஜோதிட அடிப்படையில் யாருக்கெல்லாம் நாற்பது வயதிற்கு மேல் அரசாளும் யோகம் உண்டாகும் என்பதினை பற்றி விரிவாக பார்போம். ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரகங்களான, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் ஒன்றுக்கொன்று சேரும்போது யோகம் ஏற்படும். இதே போல ஒருவர் பிறந்த ஜாதகத்தை வைத்து, அவருக்கு என்ன வகையான யோகங்கள் அமைந்திருக்கின்றன, அவற்றை அவர் எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம். ஜாதக ரீதியாக யோகங்களை முக்கியமான ஐந்து வகைகளாகப்
 

ஜோதிட அடிப்படையில் யாருக்கெல்லாம் நாற்பது வயதிற்கு மேல் அரசாளும் யோகம் உண்டாகும் என்பதினை பற்றி விரிவாக பார்போம்.

ஒருவருடைய  ஜாதகத்தில் நவகிரகங்களான, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் ஒன்றுக்கொன்று சேரும்போது யோகம் ஏற்படும்.

இதே போல ஒருவர் பிறந்த ஜாதகத்தை வைத்து, அவருக்கு என்ன வகையான யோகங்கள் அமைந்திருக்கின்றன, அவற்றை அவர் எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம். ஜாதக ரீதியாக யோகங்களை முக்கியமான ஐந்து வகைகளாகப் பிரித்துள்ளார்கள். 

கிரகங்கள் ஒன்றுகொன்று கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ அல்லது கிரகங்களின் சேர்க்கையினை பொறுத்தோ அல்லது கிரகங்கள் நேருக்கு நேர் நிற்கும் அமைப்பினை பொருத்தோ அல்லது கிரகங்களின் சேர்க்கை மற்றும் கிரகங்களின் பரிவர்த்தனையினை பொருத்தும் பல்வேறு வகையான யோகங்கள் ஒருவருக்கு ஏற்படுகிறது. 

இந்த அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தாலும் யோகம் என்பது அவற்றின் தசா புத்தியில்தான் பரிபூரணமாக வேலை செய்யும் என்பது ஜோதிட விதியாகும். ஒருவருக்கு நாற்பது வயதினை கடந்த பிறகு யாராலுமே எதிர் பார்க்காத யோகங்கள் அவருக்கு உண்டாகும்.

இவ்வாறு ஏற்படும் யோகம் அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் இதற்கு எடுத்துக்காட்டாக பல்வேறு தலைவர்களின் ஜாதகங்களை நாம் உதாரணமாக பார்க்க முடியும் . 

ஒருவரது ஜாதகத்தில் சந்திரனுக்கு திரிகோணம் எனப்படும் 5 ஆம் வீட்டில் அல்லது 9 ஆம் வீட்டில்  குரு இருந்தால், இந்த யோகம் ஏற்படும்.  இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் தங்களுடைய 40 வது வயதுக்கு மேல் புதிய தொழிலில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெறுவார்கள்.

இந்த அமைப்பு பெற்ற அரசியல் தொண்டர்கள் பலர் அரசியலில் 40 வயதுக்கு மேல் பெரிய பதவியில் அமர்ந்து புகழ் பெறுவார்கள் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும்.