×

திருமணத்திற்கு நாள் பார்க்கறீங்களா… அப்போ இதையும் படிச்சு வெச்சுக்கோங்க..!

நாளும், கிழமையும் உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்று சொல்வார்கள். நல்ல காரியங்களைத் துவங்குவதற்கு முன்பு நாள், நட்சத்திரம் எல்லாம் பார்த்து தான் செய்கிறோம். கால காலத்திற்கும் நம்முடனே நம் வாழ்நாள் முழுவதும் உடன் இருக்கப் போகும் வாழ்க்கைத் துணையை கைப்பிடிக்கப் போகும் நேரத்தை குறிக்கும் போது, இதையெல்லாம் கவனத்தில் வெச்சுக்கோங்க… அப்புறமா உங்களுடைய இல்லற வாழ்க்கையில் எந்நாளும் சந்தோஷம் தான். நாளும், கிழமையும் உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ
 

நாளும், கிழமையும் உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்று சொல்வார்கள். நல்ல காரியங்களைத் துவங்குவதற்கு முன்பு நாள், நட்சத்திரம் எல்லாம் பார்த்து தான் செய்கிறோம். கால காலத்திற்கும் நம்முடனே நம் வாழ்நாள் முழுவதும் உடன் இருக்கப் போகும் வாழ்க்கைத் துணையை கைப்பிடிக்கப் போகும் நேரத்தை குறிக்கும் போது, இதையெல்லாம் கவனத்தில் வெச்சுக்கோங்க… அப்புறமா உங்களுடைய இல்லற வாழ்க்கையில் எந்நாளும் சந்தோஷம் தான்.

நாளும், கிழமையும் உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்று சொல்வார்கள். நல்ல காரியங்களைத் துவங்குவதற்கு முன்பு நாள், நட்சத்திரம் எல்லாம் பார்த்து தான் செய்கிறோம். கால காலத்திற்கும் நம்முடனே நம் வாழ்நாள் முழுவதும் உடன் இருக்கப் போகும் வாழ்க்கைத் துணையை கைப்பிடிக்கப் போகும் நேரத்தை குறிக்கும் போது, இதையெல்லாம் கவனத்தில் வெச்சுக்கோங்க… அப்புறமா உங்களுடைய இல்லற வாழ்க்கையில் எந்நாளும் சந்தோஷம் தான்.

ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகியவைகளை சுப லக்னங்கள் என்கிறோம். இது போன்ற ஏதாவது ஒரு சுப லக்கினங்களில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்து  திருமணம் நடத்த வேண்டும்.
புதன், வியாழன், வெள்ளிக்கிழமை போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் திருமணத்திற்கு மிக ஏற்றவை. இதர கிழமைகள் திருமணத்திற்கு அவ்வளவு உகந்தவை அல்ல. சொந்தக்காரங்களுக்கு லீவ் கிடைக்கும். நண்பர்கள் எல்லோரும் வர்றதுக்கு வசதியாக இருக்கும் என்றெல்லாம் யோசித்து ஞாயிற்றுக்கிழமையை கல்யாணத்திற்கு தேர்வு செய்யாதீங்க. 

பொதுவாக திருமணங்களை மல மாதத்தில் செய்யக் கூடாது என்பார்கள். மலமாதம் என்பது ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசையோ அல்லது இரண்டு பவுர்ணமியோ வருவது தான். அப்படி வருகிற மாதங்களில் திருமண தேதியை வைக்கக் கூடாது. சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

கூடுமானவரையில் சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்துக் கொள்வது நல்லது.
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய திதிகளை சுப திதிகள் என்கிறோம். திருமணத்திற்கு நாள் குறிக்கும் போது, இது போல் ஏதாவது சுப திதியைத் தேர்வு செய்து குறிக்க வேண்டும். இதர திதிகளை தவிர்த்து நாள் குறித்தால், திருமண வாழ்வு தித்திக்கும். 

முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
அக்கினி நட்சத்திரம், கசர யோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

திருமணநாள் குறிக்கும் போது, மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமானது. நிறைய வீடுகளில், பெண்ணின் சம்மதம் கேட்டு கல்யாண தேதியை முடிவு செய்வதில்லை. அவசியம் மணமாகப் போகும் பெண்ணிடமும் கலந்தாலோசித்தே கல்யாண தேதியை முடிவு செய்ய வேண்டும். 

மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் திருமண தேதியை நிச்சயம் பண்ணக்கூடாது.
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்கிறார்கள். காதல் திருமணங்கள் அதிகமாக நடைப்பெறும் காலம் இது. அடிப்படையான இந்த விஷயங்களை மட்டுமாவது பார்த்து அப்புறமா உங்க கல்யாணத்துக்கு நாள் குறித்துக் கொள்ளுங்கள்.