×

5-8-2021 தினப்பலன் – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I ஆடி 20 Iவியாழக்கிழமை I ஆகஸ்ட் 5, 2021 05-8-2021 இன்றைய ராசி பலன்! மேஷம் இன்றைய நாள் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். சற்று தாமதங்கள் காணப்படும். வேலையில் திருப்தியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. ரிஷபம் அமைதியான நாளாக இன்றைய தினம் இருக்கும். வாழ்வில் நன்மை தரும் மாற்றங்கள் நிகழும். வேலையில் சுறுசுறுப்பான சூழல் காணப்படும்.
 

பிலவ வருடம் I ஆடி 20 Iவியாழக்கிழமை I ஆகஸ்ட் 5, 2021

05-8-2021 இன்றைய ராசி பலன்!

மேஷம்

இன்றைய நாள் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். சற்று தாமதங்கள் காணப்படும். வேலையில் திருப்தியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்

அமைதியான நாளாக இன்றைய தினம் இருக்கும். வாழ்வில் நன்மை தரும் மாற்றங்கள் நிகழும். வேலையில் சுறுசுறுப்பான சூழல் காணப்படும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

மிதுனம்

ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். மனதில் குழப்பம் ஏற்படும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி குறைந்து காணப்படும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். சிலருக்கு நிதி நிலை மகிழ்ச்சியைத் தரும்.

கடகம்

மகிழ்ச்சி குறைந்து காணப்படும். மனதில் தன்னம்பிக்கை போன்ற எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை சூழல் சுமுகமாக இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பண இழப்புக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதால் கவனம் தேவை.

சிம்மம்

சாதகமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் வெற்றிகரமான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே நல்லுறவு நீடிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

கன்னி

சமமான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் விரைந்து வேலையை முடிக்கலாம். முடியாத காரியத்தையும் கூட வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். வேலையில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். கணவன் மனைவி இடையே அமைதி நிலவும். பண வரவுக்கான வாய்ப்பு குறைவு. செலவு அதிகரிக்கும்.

துலாம்

சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை, தொழில் சூழல் அனுகூலமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி இடையே நல்லுறவு இருக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். கையிருப்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனதில் பயம், பதற்றம் அதிகரிக்கும். அணுகுமுறையில் மாற்றம் செய்வது இன்றைய நாள் சாதகமாக மாற உதவும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. குடும்பத்தில் சண்டை சச்சரவு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

தனுசு

சிறப்பான நாளாக இருக்கும். வேலை, தொழில் சூழல் மகிழ்ச்சியை அளிக்கும். நடப்பவை எல்லாம் நல்லதாகவே அமையும். வேலையை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அனுசரனையான சூழல் காணப்படும். செலவுக்கு ஏற்ப போதுமான பணம் கையிருப்பில் இருக்கும்.

மகரம்

சிறப்பான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றிகளைக் குவிக்கலாம். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். முழு திறமையை வெளிப்படுத்துவீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும்.  நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

கும்பம்

உங்கள் உழைப்பு, முயற்சி காரணமாக இன்றைய நாளை மகிழ்ச்சியான நாளாக மாற்றுவீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். நிதானமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் கருத்துவேறுபாடு நிலவும். கணவன் மனைவி மோதல் ஏற்படலாம். நிதி நிலை ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும்.

மீனம்

மந்தமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். வேலை சூழல் எரிச்சல் ஏற்படுத்தும் வகையில் இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே அன்பு பாதிக்கப்படும். நிதி நிலை சாதகமாக இருக்காது.

toptamilnews.com