×

1-8-2021 தினப்பலன் – பலன்கள் குறைந்த நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I ஆடி 16 I ஞாயிற்றுக்கிழமை I ஆகஸ்ட் 1, 2021 1-8-2021 இன்றைய ராசி பலன்! மேஷம் வாய்ப்பு குறைவான நாளாக இருக்கும். மனதில் கவலை அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். செய்யும் வேலையில் தவறுகள் ஏற்படலாம். கவனத்துடன் செயல்பட வேண்டும். மனதில் உணர்ச்சிப் பெருக்கு நிலவும். இதை குடும்பத்தினர் மத்தியில் வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியாக வைக்க வேண்டும். பண வரவுக்கு
 

பிலவ வருடம் I ஆடி 16 I ஞாயிற்றுக்கிழமை I ஆகஸ்ட் 1, 2021

1-8-2021 இன்றைய ராசி பலன்!

மேஷம்

வாய்ப்பு குறைவான நாளாக இருக்கும். மனதில் கவலை அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். செய்யும் வேலையில் தவறுகள் ஏற்படலாம். கவனத்துடன் செயல்பட வேண்டும். மனதில் உணர்ச்சிப் பெருக்கு நிலவும். இதை குடும்பத்தினர் மத்தியில் வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியாக வைக்க வேண்டும். பண வரவுக்கு சிறிதளவுக்கு வாய்ப்புள்ளது. பண இழப்புக்கு சாத்தியமான சூழல் காணப்படுகிறது.

ரிஷபம்

அசௌகரியமான சூழல் காணப்படும். எதையும் சகித்துக் கொண்டு செல்வது இன்றைய நாள் சாதகமாகக் கடக்க உதவும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் சலிப்புத் தன்மையை உணர்வீர்கள். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்க அனுசரித்துச் செல்வது அவசியம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.

மிதுனம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். பொழுதுபோக்கில் ஈடுபடுவது மன அமைதியையும் ஓய்வையும் தரும் வேலை சூழல் சாதகமாக இருக்கும். சுறுசுறுப்புடன் வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

கடகம்

மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்புடன் முன்கூட்டியே வேலையை முடிப்பீர்கள். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. நிதி நிலை சாதகமாக இருக்கும்.

சிம்மம்

விழிப்புடன், கவனத்துடன் இருக்க வேண்டிய நாள் இன்று. எதையும் எளிதாக எடுத்துக்கொண்டு கடந்து செல்வது நல்லது. வேலை சூழல் கவலைக்குரியதாக இருக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். செலவை சமாளிக்க கஷ்டப்படும் சூழல் ஏற்படலாம்.

கன்னி

சாதகமான நாளாக இருக்காது. தடைகள் சிலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மனதை அமைதியாக வைத்திருப்பது அவசியம். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படும். கணவன் மனைவி இடையே அதிருப்தி ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. அதிக செலவு ஏற்படும்.

துலாம்

அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்

முன்னேற்றமான நிலையைக் காண்பீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நட்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிக்கும் எண்ணம் அதிகரிக்கும்.

தனுசு

மனதில் கவலை, எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். அவற்றைத் தவிர்த்து மனதை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வைத்திருப்பது நல்லது. வேலை சூழல் கடுமையானதாக இருக்கும். வேலையில் தவறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கத் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே தவறான புரிதல் ஏற்படலாம். நிதி நிலை அனுகூலமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

மகரம்

அதிர்ஷ்டமான நாளாக இருக்காது. நினைத்தது நடக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்க வேண்டாம். இன்றைய தினம் அமைதியாக இருப்பது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வாழ்க்கைத் துணைவருடன் புரிந்துணர்வை ஏற்படுத்துவது அவசியம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுக்கு மேல் செலவு ஏற்படும்.

கும்பம்

மந்தமான நாளாக இருக்கும். வாய்ப்புகளைத் தவறவிடும் சூழல் ஏற்படும். வேலையில் விருப்பம் குறையும். இதனால், வழக்கமான வேலையைக் கூட செய்ய முடியாமல் திணறுவீர்கள். மனதில் உணர்ச்சி பெருக்கான சூழல் காணப்படும். இதனால் குடும்பத்தில் அமைதி குறைவு ஏற்படலாம். மன உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது குடும்பத்தின் மகிழ்ச்சியைத் தக்க வைக்க உதவும். செலவுகள் அதிகரிக்கும். எவ்வளவு வந்தாலும் போதுமானதாக இருக்காது.

மீனம்

சாதகமான நாளாக இருக்காது. தடைகள் நிறைந்ததாக இருக்கும். வெற்றி பெற திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் சூழல் வரலாம். குடும்பத்தில் அன்பு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை அதிர்ஷ்டமாக இருக்கும். பண வரவு அதிக மகிழ்ச்சியைத் தரும்.

toptamilnews.com