×

4-3-2021 தினப்பலன் – இந்த 7 ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது!

சார்வரி வருடம் I மாசி 20 I வியாழக்கிழமை I மார்ச் 4, 2021 04-3-2021 இன்றைய ராசி பலன்! மேஷம் வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் அமையும். உங்கள் வேலைக்கு முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். குடும்பத்தில் விருந்தினர் வருகை காரணமாக மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் நிலவும். நிதி நிலை சாதகமாக இருக்கும். ரிஷபம் சுமுகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். இன்றைய நாளில் முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
 

சார்வரி வருடம் I மாசி 20 I வியாழக்கிழமை I மார்ச் 4, 2021

04-3-2021 இன்றைய ராசி பலன்!

மேஷம்

வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் அமையும். உங்கள் வேலைக்கு முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். குடும்பத்தில் விருந்தினர் வருகை காரணமாக மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் நிலவும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

ரிஷபம்

சுமுகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். இன்றைய நாளில் முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.  வேலை பளு அதிகரிக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக உள்ளது. பண வரவு மகிழ்ச்சியைத் தரும்.

மிதுனம்

மிதமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். வேலையில் தடைகள் ஏற்படலாம். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.  குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவு அதிகரிக்கும்.

கடகம்

சுமாரான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை குறையும். வேலை, தொழிலில் ஓரளவுக்கு சாதகமான சூழல் இருக்காது.  குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படும். பண வரவுக்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு. செலவு விஷயத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

சிம்மம்

வளர்ச்சிக்குரிய நாளாக இருக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் உற்சாக மனநிலை நிலவும். நிதி விவகாரத்தில் ஓரளவுக்கு திருப்தியான மனநிலை இருக்கும்.

கன்னி

ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாக இன்றைய நாள் அமையும். தன்னம்பிக்கை குறையும். வேலை பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் போக்கு ஏற்படும். கணவன் மனைவி இடையே கோபம், மன வருத்தம் அதிகரிக்கும். சிலருக்கு பண வரவுக்கான வாய்ப்புள்ளது. வீண் செலவு ஏற்படலாம்.

துலாம்

மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலையில் வெற்றி காண்பீர்கள். சக பணியாளர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பண விஷயத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம்.

விருச்சிகம்

ஏற்ற இறக்கம் சம அளவில் உள்ள நாளாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் ஏற்படும். பண வரவுக்கும் செலவுக்கும் சம அளவில் வாய்ப்புள்ளது.

தனுசு

கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டிய நாளாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற வெற்றி நிச்சயம் கிடைக்கும். பணிச் சுமை அதிகரிக்கும். வேலை காரணமாக வெளியூருக்குச் செல்ல நேரிடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

மகரம்

இன்று நன்மையான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் ஆற்றலுடன் ஈடுபட்டு, முன்னேற்றம் காண்பீர்கள்.  கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவுக்கு ஓரளவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு உயரும்.

கும்பம்

மனதை உற்சாகமாக வைத்திருப்பதன் மூலம் இன்றைய நாளும் உற்சாகமானதாக மாறும். வேலையில் சில தடைகள் வரலாம். இதன் காரணமாக சில தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. பண இழப்புக்கான வாய்ப்பு உள்ளது.

மீனம்

மனதில் கவலை, குழப்பமான உணர்வு அதிகரிக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. கவனத்துடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.