×

28-2-2021 தினப்பலன் – 6 ராசிகளுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I மாசி 16 I ஞாயிற்றுக் கிழமை I பிப்ரவரி 28, 2021 26-2-2021 இன்றைய ராசி பலன்! மேஷம் இன்று மிதமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். வேலை, தொழிலில் சவாலான சூழல் காணப்படும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றிபெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே மனநிறைவு காணப்படும். பண வரவுக்கு சிறிது வாய்ப்புள்ளது. செலவு அதிகரிக்கும். ரிஷபம் ஓரளவுக்கு சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். ஓய்வு மற்றும் பொழுதுபோக்கில்
 

சார்வரி வருடம் I மாசி 16 I ஞாயிற்றுக் கிழமை I பிப்ரவரி 28, 2021

26-2-2021 இன்றைய ராசி பலன்!

மேஷம்

இன்று மிதமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். வேலை, தொழிலில் சவாலான சூழல் காணப்படும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றிபெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே மனநிறைவு காணப்படும். பண வரவுக்கு சிறிது வாய்ப்புள்ளது. செலவு அதிகரிக்கும்.

ரிஷபம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். ஓய்வு மற்றும் பொழுதுபோக்கில் மனதை செலுத்துவதன் மூலம் மன அமைதி பெறலாம். வேலை பளு அதிகரிக்கும். இதன் காரணமாக சின்ன சின்ன தவறுகள் நேரலாம். கணவன் மனைவி இடையே அகந்தை போக்கு நிலவும். அன்பு செலுத்துவதன் மூலம் அமைதியை ஏற்படுத்தலாம். எதிர்பார்த்த பண வரவு இருக்காது. செலவு காணப்படும்.

மிதுனம்

சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். கடின உழைப்புக்கு ஏற்ப மரியாதை, பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும்.

கடகம்

சுமாரான நாளாக இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்தி காரியத்தில் இறங்கினால் வெற்றி கிட்டும். வேலை, தொழிலில் சுமூகமான சூழல் இருக்கும். வெற்றி பெற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் புரிதல் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்தல் இருந்தால் மகிழ்ச்சி ஏற்படும். வரவும் செலவும் சேர்ந்தது போல் காணப்படும்.

சிம்மம்

ஓரளவுக்கு சிறப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டு குறித்த காலத்துக்கு முன்பு முடிப்பீர்கள். உங்கள் உழைப்பு சிறப்பாக வெளிப்படும். மன உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். செலவு அதிகரிக்கும். கையிருப்பு குறையும்.

கன்னி

மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். இன்று எது நடந்தாலும் அது நல்லதுக்கே என்ற மனநிலை இருந்தால் நல்ல பலன்களைப் பெறலாம். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

துலாம்

செழிப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். மகிழ்ச்சியான மனநிலை இருக்கும். வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். நல்ல விஷயத்துக்கு செலவு செய்வீர்கள்.

விருச்சிகம்

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் நிலவும். உற்சாகத்துடன் வேலையில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பண வரவுக்கு சிறிது வாய்ப்புள்ளது.

தனுசு

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் பயம், பதற்றம் அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் கண்டு கவலைப்படாமல் இருப்பது நல்லது. வேலை பளு அதிகரிக்கும். வேலையை முடிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படும். குடும்பத்தில் அமைதியின்மை நிலவும். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவு அதிகரிக்கும்.

மகரம்

இன்றைய தினம் எதிர்பார்த்த அளவுக்கு சாதகமாக இருக்காது. மன அமைதி குறையும். இதை சரி செய்ய தியானம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவது நல்லது. வேலையில் சில தடைகளை சந்திக்க நேரிடலாம். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம். பண வரவு இருக்காது. வீண் செலவு அதிகரிக்கும்.

கும்பம்

இன்றைய தினம் சாதகமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். மனத் தெளிவு பெறுவீர்கள். வேலையில் சாதகமான போக்கு நிலவும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே உறவு பலப்படும். சிலருக்கு பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

மீனம்

வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடினமான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகாிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு சற்று உள்ளது. இன்றைய செலவுக்கு அது போதுமானதாக இருக்கும்.