×

27-2-2021 தினப்பலன் – 5 ராசிக்காரர்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும்!

சார்வரி வருடம் I மாசி 15 I சனிக் கிழமை I பிப்ரவரி 27, 2021 இன்றைய ராசி பலன்! மேஷம் இன்றைய நாள் சற்று சாதகக் குறைவாக உள்ளது. கவலை வேண்டாம். நிதானமாக, அமைதியாக எதையும் எதிர்கொள்வதன் மூலம் பிரச்னையைத் தவிர்க்கலாம். வேலை பளு அதிகரிக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பமான நிலை நிலவும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். தேவை அதிகரிக்கும். ரிஷபம் மிதமான
 

சார்வரி வருடம் I மாசி 15 I சனிக் கிழமை I பிப்ரவரி 27, 2021

இன்றைய ராசி பலன்!

மேஷம்

இன்றைய நாள் சற்று சாதகக் குறைவாக உள்ளது. கவலை வேண்டாம். நிதானமாக, அமைதியாக எதையும் எதிர்கொள்வதன் மூலம் பிரச்னையைத் தவிர்க்கலாம். வேலை பளு அதிகரிக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பமான நிலை நிலவும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். தேவை அதிகரிக்கும்.

ரிஷபம்

மிதமான வளர்ச்சிக்குரிய நாளாக இருக்கும். வேலையில் தாமதங்கள் ஏற்படும். கவனக் குறைவு காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லிணக்கத்தைப் பராமரிப்பது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் குறையும். பண வரவு சுமாராக இருக்கும். செலவு அதைவிட அதிகமாக இருக்கும்.

மிதுனம்

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். மன அமைதி அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு குறித்த நேரத்துக்கு முன்பாகவே முடிப்பீர்கள். வேலைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

கடகம்

மனதில் அச்ச உணர்வு நிலவும். எந்த ஒரு விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்வதன் மூலம் மன அழுத்தம், கவலை உணர்வைத் தவிர்க்கலாம். புதிய முயற்சிகளை இன்றைய நாளில் தொடங்க வேண்டாம். வேலையில் சவாலான சூழல் நிலவும். குடும்பத்தில் அமைதி குறையும். நிதி நிலை சாதகமாக இல்லை. பண இழப்பு நேரிடலாம்.

சிம்மம்

ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வெளியே பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையலாம். அது மகிழ்ச்சியைத் தரும். வேலை பளு அதிகரிக்கும். கூடுதல் பொறுப்புக்கள் உங்களைத் தேடி  வரும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காணப்படும். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது நல்லது. பண வரவுக்கு வாய்ப்பு மிகமிகக் குறைவு. பண இழப்புக்கான வாய்ப்புள்ளதால் கவனம்.

கன்னி

கடினமான உழைப்பை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். இதனால் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். வேலை பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். வீண் வார்த்தைகள் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவு ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. நிதி நிலை ஓரளவுக்கு மகிழ்ச்சியானதாகவே இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

துலாம்

இன்று செழிப்பான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை பளு அதிகரித்தாலும் அனைத்தையும் உற்சாகத்துடன் குறித்த நேரத்துக்கு முன்னதாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்

முன்னேற்றமான நாளாக இன்றைய தினம் அமையும். மனத் தெளிவு அடைவீர்கள். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள செலவுகள் செய்வீர்கள்.

தனுசு

மந்தமான நாளாக இருக்கும். மனதில் கவலை அதிகரிக்கும். வீண் கவலைகளைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும். கவலை காரணமாக வேலையில் தவறுகள் நேரிடலாம். குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும். கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் பாதிக்கப்படும். நிதி நிலை சாதகமாக இருக்காது. பற்றாக்குறை இருக்கும்.

மகரம்

ஏற்ற இறக்கம் கொண்ட நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை குறையும். குழப்பம் அதிகரிக்கும். இதனால் இன்றைய நாளில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வேலையில் சின்ன சின்ன தவறுகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம். இதைத் தவிர்க்க நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். நிதி நிலை சாதகமாக இல்லை. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

கும்பம்

வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். எண்ணங்கள் நிறைவேறும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை செய்யும் இடத்தில் சாதகமான போக்கு நிலவும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பணப் புழக்கம் சீராக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

மீனம்

உற்சாகமான நாளாக இருக்கும். காரியங்கள் வெற்றிபெறும். வேலையில் சாதகமான போக்கு இருக்கும். புகழும் பாராட்டும் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பும், புரிதலும் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு உயரும்.