×

22-1-2021 தினப்பலன்: சோதனை மிகுந்த நாள் இன்று!

சார்வரி வருடம் I தை 9 I வெள்ளிக்கிழமை I ஜனவரி 22, 2021 இன்றைய ராசி பலன்! மேஷம் மேஷ ராசி அன்பர்களே இன்று கடுமையான சூழலை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். வேலை அழுத்தம் அதிகரிக்கும். இதன் காரணமாக சில தவறுகள் செய்ய நேரிடலாம். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் ஏற்படலாம். செலவு அதிகரிக்கும். ரிஷபம் ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலையில் மனம் ஈடுபாடு காட்டாது. இதனால் அலுவலகத்தில் உடன்
 

சார்வரி வருடம் I தை 9 I வெள்ளிக்கிழமை I ஜனவரி 22, 2021

இன்றைய ராசி பலன்!

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே இன்று கடுமையான சூழலை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். வேலை அழுத்தம் அதிகரிக்கும். இதன் காரணமாக சில தவறுகள் செய்ய நேரிடலாம். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் ஏற்படலாம். செலவு அதிகரிக்கும்.

ரிஷபம்

ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலையில் மனம் ஈடுபாடு காட்டாது. இதனால் அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். புரிதல் குறைவால் கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்படலாம். பண புழக்கம் குறைந்து காணப்படும்.

மிதுனம்

சுமூகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். வேலை, தொழிலில் திறமைக்கு ஏற்ற மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம் என்பதால் கவனம் தேவை. நிதி நிலை சாதகமாக இருக்காது. பண விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது.

கடகம்

இலக்கை நோக்கிய உங்கள் பயணம் தொடரும். உங்களுக்கான வேலையை சிறப்புடன் செய்வீர்கள். உயர் அதிகாரிகள், சக ஊழியர்கள் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையாக பேசுவதன் மூலம் சந்தோஷத்தை ஏற்படுத்தலாம். பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். திட்டமிட்டு செலவு செய்தால் பிரச்னை எதுவும் இருக்காது.

சிம்மம்

சோர்வும் குழப்பமும் ஏற்பட்டு உங்கள் நாளை பாதிப்படைய செய்யலாம். விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பண வரவு இருக்கும். எதிர்கால தேவைக்கு ஏற்ப திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம்.

கன்னி

அசௌகரியமான மனநிலை இருக்கும். மன அழுத்தம், நெருக்கடி ஏற்படும். வேலை, தொழிலில் சவாலை எதிர்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் ஏற்படலாம். பண வரவு இருக்காது. வீண் செலவு ஏற்படலாம்.

துலாம்

எதிர்பாராத சில நிகழ்வுகள் இன்று நிகழும். பதற்றமான சூழல் காணப்படும். வேலை பளு அதிகரிக்கும். அதற்கு ஏற்ப திட்டமிட்டு செயல்பட்டால் சமாளிக்க முடியும். கணவன் மனைவி இடையே சுமூகமான சூழல் நிலவும். மகிழ்ச்சியான சூழல் உருவாக்க நல்லுறவை பேணுங்கள். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது.

விருச்சிகம்

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். இலக்கை அடைய முயற்சிப்பீர்கள். உங்கள் திறமைக்கு ஏற்ற மரியாதை கிடைக்கும். கணவன் மனைவி இடையே நல்லுறவு மகிழ்ச்சி நிலவும். நிதி நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். சேமிப்பு அதிகரிக்கும்.

தனுசு

இன்றைய நாளை அதன் போக்கில் விட்டுவிடுங்கள் நல்லதே நடக்கும். குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பணவரவுக்கு வாய்ப்புள்ளது. செலவும் அதிகரிக்கலாம்.

மகரம்

அசௌகரியம், மன வருத்தம் உள்ள நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதிநிலை திருப்திகரமாக இருக்காது. பணப் பற்றாக்குறை இருக்கும்.

கும்பம்

இலக்கை அடைய சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி உங்களுக்குத்தான். வேலை பளு அதிகரிக்கும். அலுவல் காரணமாக பயணங்கள் ஏற்படலாம். மனதில் கவலைகள் எழுந்து மறையும். வேலை பளு, குழப்பம் காரணமாக குடும்பத்தில் கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் ஏற்படலாம். இன்று ஓரளவுக்கு வரவு இருக்கும். அதே நேரத்தில் அதை விட செலவும் அதிகமாக இருக்கும்.

மீனம்

கவலையான மனநிலையுடன் இருப்பீர்கள். வேலை பளு அதிகரித்து மேலும் மனதை கவலை கொள்ளச் செய்யும். பணி நிமித்தம் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதி குறையலாம். மனம் விட்டு பேசுவதன் மூலம் பிரச்னையை சமாளிக்க முடியும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. நீண்ட காலம் நிலுவையில் இருந்த பணம் வர வாய்ப்பு உள்ளது.