×

19-4-2021 தினப்பலன் – பணப் புழக்கம் குறைந்து காணப்படும்!

பிலவ வருடம் I சித்திரை 8 I புதன்கிழமை I ஏப்ரல் 21, 2021 இன்றைய ராசி பலன்! மேஷம் திருப்திகரமான நாளாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். இருப்பினும் வேலையில் சாதகமான சூழலே காணப்படும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் ஏற்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். இன்றைய நாள் தேவைக்கு ஏற்ப பணம் கிடைக்கும். ரிஷபம் சுமாரான நாளாக இருக்கும். கூடுதல் கவனத்துடன் இருப்பது
 

பிலவ வருடம் I சித்திரை 8 I புதன்கிழமை I ஏப்ரல் 21, 2021

இன்றைய ராசி பலன்!

மேஷம்

திருப்திகரமான நாளாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். இருப்பினும் வேலையில் சாதகமான சூழலே காணப்படும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் ஏற்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். இன்றைய நாள் தேவைக்கு ஏற்ப பணம் கிடைக்கும்.

ரிஷபம்

சுமாரான நாளாக இருக்கும். கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. வேலைச் சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இது கவலையை அளிக்கும். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு நிலவும். நிதி வரவுக்கு வாய்ப்புள்ளது. அதை விட செலவு அதிகமாக இருக்கும்.

மிதுனம்

பதற்றமான நாளாக இருக்கும். மனதில் நிதானம் குறையும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் தவறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். கணவன் மனைவி இடையே திருப்தியான மனநிலை இருக்காது. மனம் விட்டு பேசுவதன் மூலம் இதை சரி செய்யலாம். பணப் புழக்கம் குறைந்து காணப்படும்.

கடகம்

சாதகமான நாளாக இருக்கும். வேலைச் சூழல் சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். வெற்றிகள் தேடி வரும். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் நிலவ நட்புடன் பழகுவது நல்லது. திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். செலவு, பண இழப்புக்கான வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். அதிக உழைப்பின்றி சாதமான பலன்களைப் பெறக்கூடிய நாளாக இருக்கும். வேலையிடச் சூழல் கடினமாக இருக்கும். உடன் பணியாற்றுபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும்.

கன்னி

இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வேலை சூழல் சிறப்பானதாக இருக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் மேம்படும். பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. இன்றைய தினம் லாபகரமாக இருக்கும்.

துலாம்

இன்றைய தினம் கவனத்துடன் இருக்க வேண்டும். மற்றவர்கள் பேசும் போது வார்த்தையில் கவனம் தேவை. இது மோதல் போக்கு ஏற்படுவதைத் தடுக்க உதவும். பணிச்சூழல் சுமூகமாக இருக்காது. திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் சாதகமான பலன்களைப் பெறலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு காணப்படும். இதனால் மகிழ்ச்சிக் குறைவு நிலவும். வீண் செலவுகள் ஏற்படும்.

விருச்சிகம்

இன்று சாகம் பாதகம் என இரண்டும் கலந்து காணப்படும். நிதானமாக இன்றைய தினத்தைக் கையாள்வதன் மூலம் சாதகமான பலன்களைப் பெறலாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையும். நிதி நிலை சாதகமாக இருக்காது.

தனுசு

எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வேலை சூழல் சுமாராக இருக்கும். கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். கணவன் மனைவி இடையே சுமூக உறவு நிலவும். புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினருக்காகச் செலவு செய்வீர்கள்.

மகரம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். எனவே, இன்றைய தினம் முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருந்துவிட வேண்டாம். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரியின் அங்கீகாரத்தை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். பணப்புழக்கம் சுமுகமாக இருக்கும்.

கும்பம்

ஏற்றம் இறக்கம் கொண்ட நாளாக இருக்கும். மனதில் நம்பிக்கையை அதிகரித்துக்கொள்வது நல்லது. பணிச் சுமை அதிகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் கவனமாகப் பழக வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம். நிதி நிலை சுமாராக இருக்கும்.

மீனம்

நிதானமாக செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். மனதில் எழும் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்துவிடாமல் நிதானமாக சிந்தித்துச் செயல்பட வேண்டும். வேலை இடத்தில் அதிருப்தியான சூழல் காணப்படும். வேலையில் தவறுகள் நேரலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

toptamilnews.com