×

21-2-2021 – ஞாயிறு ராசி பலன்!

சார்வரி வருடம் I மாசி 9 I ஞாயிற்றுக்கிழமை I பிப்ரவரி 21, 2021 இன்றைய ராசி பலன்! மேஷம் ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். பொறுப்புக்கள் அதிகரிக்கும். வேலை, தொழிலில் சிறப்பான சூழல் இருக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு சுமூகமாக செல்லும். ஓரளவுக்குப் பண வரத்துக்கு வாய்ப்புள்ளது. ரிஷபம் இன்று சாதகமான நாளாக அமையும். வேலை பளு அதிகரிக்கும். இதன் காரணமாக வேலையில் சின்ன சின்ன தவறுகள் நேரலாம். கணவன் மனைவி
 

சார்வரி வருடம் I மாசி 9 I ஞாயிற்றுக்கிழமை I பிப்ரவரி 21, 2021

இன்றைய ராசி பலன்!

மேஷம்

ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். பொறுப்புக்கள் அதிகரிக்கும். வேலை, தொழிலில் சிறப்பான சூழல் இருக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு சுமூகமாக செல்லும். ஓரளவுக்குப் பண வரத்துக்கு வாய்ப்புள்ளது.

ரிஷபம்

இன்று சாதகமான நாளாக அமையும். வேலை பளு அதிகரிக்கும். இதன் காரணமாக வேலையில் சின்ன சின்ன தவறுகள் நேரலாம். கணவன் மனைவி இடையே நல்லுறவு நீடிக்கும். நிதி நிலை சாதகமாக இல்லை. நிதி இழப்பு ஏற்படலாம்.

மிதுனம்

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் ஏற்படும். ஓரளவுக்கு பண வரத்துக்கான வாய்ப்பு உள்ளது. செலவும் அதிகரிக்கும்.

கடகம்

அமைதியான நாளாக இருக்கும். மனத் திருப்தி அதிகரிக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம் இருக்கும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

சிம்மம்

சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை, தொழிலில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது. பண வரவு மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

கன்னி

மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் அமையும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்தில் சாதகமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. செலவு அதிகரிக்கும்.

துலாம்

சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்காது.  வேலை, தொழிலில் சாதகமான சூழலை காண்பீர்கள். வேலை பளு காரணமாக குறித்த நேரத்தில் பணியை முடிக்க முடியாமல் திணறும் சூழல் வரலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி குறையும். பண வரவுக்கான வாய்ப்பு இல்லை. பணப் பற்றாக்குறை ஏற்படலாம்.

விருச்சிகம்

துடிப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும்.  எதிர்பாராத அலுவலக பயணங்கள் ஏற்படலாம். அமைதியாக இருப்பதன் மூலம் குடும்பத்தில், வெளியில் மகிழ்ச்சியாக இருக்க முடியும். பண வரவு இல்லை. செலவு அதிகரிக்கும்.

தனுசு

சாதகமான சூழல் இன்று இருக்கும். திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். மனதில் மகிழ்ச்சி, உற்சாகம் அதிகரிக்கும். வேலை, தொழிலில் சவால்கள் இருக்கும். சிறு தவறுகள் நேர வாய்ப்புள்ளது. வீண் அலைச்சல் ஏற்படும். செலவு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு.

மகரம்

நன்மைகள் உங்களை வந்து சேரும் நாளாக இருக்கும். நெகட்டிவ் சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. வேலை பளு அதிகரிக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ இன்று அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். நிதி விவகாரத்தில் கவனம் தேவை. மன வருத்தம் ஏற்படலாம்.

கும்பம்

மிதமான பலன்கள் தரும் நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவுக்கான வாய்ப்பு குறைவு.

மீனம்

நண்பர்கள், உறவினர்கள் மூலம் நல்ல செய்தி வரும். இன்றைய தினம் சாதகமாக மாறும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்லுறவு அதிகரிக்கும். பண வரவுக்கு அதிக வாய்ப்புள்ளது. கடன் வாங்கும்போது கவனம் தேவை.