×

18-7-2021 தினப்பலன் – சாதகமான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I ஆடி 2 I ஞாயிற்றுக்கிழமை I ஜூலை 18, 2021 இன்றைய ராசிபலன் மேஷம் விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம். வேலை சூழல் வெற்றிகரமாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். லாபமான நாளாக இருக்கும். ரிஷபம் அனுகூலமான நாளாக இருக்கும். சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி
 

பிலவ வருடம் I ஆடி 2 I ஞாயிற்றுக்கிழமை I ஜூலை 18, 2021

இன்றைய ராசிபலன்

மேஷம்

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம். வேலை சூழல் வெற்றிகரமாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். லாபமான நாளாக இருக்கும்.

ரிஷபம்

அனுகூலமான நாளாக இருக்கும். சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வேலை சூழல் சுறுசுறுப்பாக இருக்கும். நல்ல தரத்துடன் சிறப்பாக பணியாற்றுவீர்கள். குடும்பத்தில் அன்பு நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு நீடிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். பயனுள்ள காரியங்களுக்கு செலவு செய்வீர்கள்.

மிதுனம்

மகிழ்ச்சி குறைவான நாளாக இருக்கும். எதிர்பாராத நன்மைகள் நடக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் ஈகோ நிலவும். இதனால் கணவன் மனைவி இடையே புரிதல் குறையலாம். பணப் புழக்கம் சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

கடகம்

சுமாரான நாளாக இருக்கும். சௌகரியங்களை விட்டுக் கொடுக்கும் சூழல் ஏற்படலாம். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. அதிக பணிச் சுமை கவலையை ஏற்படுத்தும். குடும்பத்தில் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே அமைதி குறையும். செலவுகள் அதிகரிக்கும்.

சிம்மம்

வளர்ச்சிக்குரிய நாளாக இருக்கும். அனைத்து செயல்களும் சுமுகமாக நடக்கும். விருப்பங்கள் நிறைவேறும். வேலை சூழல் உற்சாகமானதாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே உறவு வலுப்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

கன்னி

மந்தமான நாளாக இருக்கும். கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேலை சூழல் கடினமானதாக இருக்கும். எதிர்காலம் தொடர்பான கவலை ஏற்படும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே நல்லுறவு நீடிக்க விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.

துலாம்

பலன்கள் குறைந்து காணப்படும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. நிதானத்துடன் வேலை விஷயங்களை கையாள்வது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. பண வரவுக்கும் செலவுக்கும் சம அளவில் வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

சுமாரான நாளாக இருக்கும். இலக்குகளை அடைவதில் தாமதம் ஏற்படும். வேலை சூழல் கடினமாக இருக்கும். சவால்களை சந்திக்கும் அளவுக்கு மனதை பக்குவப்படுத்திக்கொள்வது நல்லது. குடும்பத்தில் பிரச்னையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க சின்ன விஷயத்தை பெரிதாக்கும் போக்கை கைவிட வேண்டும். செலவுகள் அதிகமாக இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

தனுசு

சாதகமான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைத் தரும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் நம்பிக்கையையும் பாராட்டையும் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

மகரம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வெற்றி பெற வேண்டும் என்ற மன உறுதி அதிகரிக்கும். வேலை, தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். திறமையை வெளிப்படுத்தி கடினமான காரியத்தையும் முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கு சிறிதளவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

கும்பம்

சாதகமான நாளாக இருக்காது. எதிர்காலம் குறித்த அச்சம் மனதில் நிழலாடும். வேலை சூழல் கடினமாக இருக்கும். இதனால் குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படும். குடும்பத்தில் நம்பிக்கை குறைவு ஏற்படும். கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பணப் பற்றாக்குறை ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

மீனம்

அதிருப்தியான சூழல் நிலவும். மனதில் அதிக சிந்தனைகள் ஓடும். வேலையில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கலாம். இதைத் தவிர்க்க திட்டமிட்டு, நிதானத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். மனதை உற்சாகமாக வைப்பதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.