×

18-2-2021 தினப்பலன்: கவனத்துடன் இருக்க வேண்டிய தினம் இன்று!

சார்வரி வருடம் I மாசி 6 I வெள்ளிக்கிழமை I பிப்ரவரி 18, 2021 இன்றைய ராசி பலன்! மேஷம் சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வளர்ச்சியைக் காண்பீர்கள். வேலையில் பளு அதிகரித்தாலும் அனைத்தையும் எதிர்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். ரிஷபம் இன்றைய தினம் ஓரளவுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். வேலை, தொழில் சிறப்பாக நடக்கும்.
 

சார்வரி வருடம் I மாசி 6 I வெள்ளிக்கிழமை I பிப்ரவரி 18, 2021

இன்றைய ராசி பலன்!

மேஷம்

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வளர்ச்சியைக் காண்பீர்கள். வேலையில் பளு அதிகரித்தாலும் அனைத்தையும் எதிர்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும்.

ரிஷபம்

இன்றைய தினம் ஓரளவுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். வேலை, தொழில் சிறப்பாக நடக்கும். நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் இன்றைய தினத்தில் வெற்றிகள் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுக்கும் மனநிலை அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பில்லை. செலவு கட்டுக்குள் இருக்கும்.

மிதுனம்

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இன்றைய தினம் இருக்கும். மன திருப்தி அதிகரிக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சிலருக்கு பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது. அதற்கு ஏற்றார்ப்போல் செலவும் இருக்கும்.

கடகம்

இன்று மிகவும் நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம். மனக் குழப்பம் அதிகரிக்கும். இதனால் வேலை, தொழிலில் சிறு சிறு தவறுகள் நேரிடலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண விஷயத்தில் கவனம் தேவை.

சிம்மம்

ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். வேலை, தொழிலில் சிறப்பான சூழல் காணப்படும். குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படலாம். கவனத்துடன் செயல்பட்டால் கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்கலாம். பண வரவுக்கான வாய்ப்பு இல்லை. நிதி விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை.

கன்னி

இன்றைய தினம் சவால் மிக்கதாகவும் இருக்கும். மனதில் பயம் பதற்றம் அதிகரிக்கும். வேலை பளு அதிகரிக்கும். மனக் குழப்பம், பதற்றம் காரணமாக வேலையில் தவறுகள் நேரிடலாம் என்பதால் அதீத கவனம் தேவை. குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு இல்லை. வீண் செலவு அதிகமாக இருக்கும்.

துலாம்

வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். எனவே, முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்கலாம். வேலை, தொழில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு அதிகரிக்கும். இன்றைய தினம் பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு உயரும்.

விருச்சிகம்

எந்த ஒரு விஷயத்திலும் அதீத கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். வேலை, தொழிலில் தடைகள் ஏற்படலாம். தவறுகள் நிகழலாம். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி வீண் வாக்குவாதம் ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்காது.

தனுசு

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலையில் பல தடைகள் வரலாம். சோர்வு உங்களை ஆட்கொள்ளும். குறித்த நேரத்தில் பணியை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இல்லை. பணத்தை திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

மகரம்

இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும். வேலை பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இதை எதிர்கொள்ளலாம். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். சேமிக்க வாய்ப்புள்ளது.

கும்பம்

இன்றைய திருப்திகரமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலையில் சில தடைகளைச் சந்திப்பீர்கள். தாமதம் ஆனாலும் எடுத்த காரியத்தை முடிக்காமல் விட மாட்டீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு இல்லை. செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

மீனம்

இன்றைய தினம் ஏற்றம் இறக்கம் கொண்டதாக இருக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் நிலவும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் – மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவுக்கு ஏற்ப செலவும் இருக்கும். எனவே, கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.