×

18-1-2021 இன்றைய ராசி பலன்!

சார்வரி வருடம் I தை 5 I திங்கட்கிழமை I ஜனவரி 18, 2021 இன்றைய ராசி பலன்! மேஷம் மகிழ்ச்சியான உற்சாகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க சாதகமான தினம். சகோதரர்கள் வழியில் பிரச்னைகள் வரலாம். வேலை, தொழில், வியாபாரத்தில் சாதகமான போக்கு இருக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். ரிஷபம் புதிய முயற்சிகள் வெற்றிபெறும். இன்று உடன் பணி புரிபவர்கள், சக வியாபாரிகளால் போட்டி அதிகரிக்கும். அனைத்தையும் சமாளித்து லாபம் காண்பீர்கள். குடும்பத்தில்
 

சார்வரி வருடம் I தை 5 I திங்கட்கிழமை I ஜனவரி 18, 2021

இன்றைய ராசி பலன்!

மேஷம்

மகிழ்ச்சியான உற்சாகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க சாதகமான தினம். சகோதரர்கள் வழியில் பிரச்னைகள் வரலாம். வேலை, தொழில், வியாபாரத்தில் சாதகமான போக்கு இருக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

ரிஷபம்

புதிய முயற்சிகள் வெற்றிபெறும். இன்று உடன் பணி புரிபவர்கள், சக வியாபாரிகளால் போட்டி அதிகரிக்கும். அனைத்தையும் சமாளித்து லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

மிதுனம்

உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். துணைவரிடத்தில் அன்பு அதிகரிக்கும். நிதி நிலையில் ஸ்திரத்தன்மை இருக்கும். செலவு கட்டுக்குள் இருக்கும்.

கடகம்

நிதானமாக செயல்பட வேண்டிய தினம் இன்று. முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தள்ளிப்போடவும். மற்றவர்களுடன் பேசும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். தொழிலில், வேலை செய்யும் இடத்தில் உடன் பணி புரிபவர்கள், வியாபாரிகளால் தொந்தரவு ஏற்படும். பண வரவு குறைவாக இருக்கும்.

சிம்மம்

சிந்தித்து செயல்பட வேண்டிய தினம் இன்று. இருப்பினும் எதிர்பார்த்த வேலைகள் நடந்து முடியும். மனக் குழப்பம் ஏற்படும். அதிக வேலைகள் உங்களை வாட்டி வதைக்கும். குடும்பத்தில் அமைதி குறைவாகவே இருக்கும். கவனக் குறைவு காரணமாக பணத்தை இழக்க நேரிடலாம். முக்கிய முடிவுளை எடுக்க வேண்டாம்.

கன்னி

செலவுகள் அதிகரிக்கக் கூடிய நாளாக இருக்கும். கடின உழைப்பின் மூலம் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். துணையுடன் இருந்த கசப்பு நீங்கி புரிதல் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

துலாம்

அனுகூலமான தினமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இலக்குகள் மீது கவனம் செலுத்தி வேலை செய்தால் வெற்றி நிச்சயம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். துணைவருடன் அனுசரித்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சியைத் தக்க வைக்க முடியும். பண வரவு இருக்கும். நண்பர்கள், உறவினர்களுக்கு உதவிகள் செய்வீர்கள்.

விருச்சிகம்

மகிழ்ச்சியான தினமாக இருக்கும். எனவே, உங்கள் வழக்கமான பணிகளில் மட்டும் கவனத்தைச் செலுத்துங்கள். சவால்களை திறமையுடன் கையாண்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு.

தனுசு

கடினமாக உழைத்தாலும் உங்களுக்கு சுமாரான பலன்களே கிடைக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் செலவும் அதிகமாக இருக்கும். குடும்பத்தினர், மற்றவர்களுடன் பொறுமையாக பேசுவதன் மூலம் மனஸ்தாபம் ஏற்படுவதைத் தடுக்கலாம். குடும்பத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் ஆரோக்கியமான உறவை பராமரிக்க முடியும்.

மகரம்

மகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். முன்னேற்றமான நாளாக அமையும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். துணைவருடன் அன்பாக இருப்பீர்கள். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

கும்பம்

தொடங்கும் காரியங்கள் சமூகமாகவே முடியும். இன்றைய நாளும் சுமுகமான, முன்னேற்றமான நாளாக அமையும். முக்கிய முடிவுகளை எடுக்க இன்றைய தினம் சரியாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். வேலையில் உயர் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் கிடைக்கும். உடன் பணி புரிபவர்களால் மன சங்கடம் ஏற்படலாம். சேமிப்பு அதிகரிக்கும்.

மீனம்

இன்றைய தினம் பொறுமையை அதிகமாக கடைப்பிடிக்க வேண்டும். எதிலும் எதார்த்தநிலையை உணர்ந்து செயல்படுங்கள். எந்த ஒரு நல்ல காரியத்தையும் பிற்பகலுக்கு பிறகு தொடங்குங்கள். குடும்பத்தில், வேலையில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். அமைதியாக, நிதானமாக இருப்பதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். சிலருக்கு பண வரவும் செலவும் இருக்கலாம்.