×

17-4-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு செல்வ செழிப்பான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I சித்திரை 4 I சனிக்கிழமை I ஏப்ரல் 17, 2021 இன்றைய ராசி பலன்! மேஷம் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வெற்றி பெறுவீர்கள். மனதில் எழும் வீண் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் போக்கு ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே அகந்தை ஏற்படும். நிதி நிலை ஓரளவுக்கு ஆதாயமாக இருக்கும். செலவும் அதிகரிக்கும். ரிஷபம் வளர்ச்சி குறைவான
 

பிலவ வருடம் I சித்திரை 4 I சனிக்கிழமை I ஏப்ரல் 17, 2021

இன்றைய ராசி பலன்!

மேஷம்

தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வெற்றி பெறுவீர்கள். மனதில் எழும் வீண் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் போக்கு ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே அகந்தை ஏற்படும். நிதி நிலை ஓரளவுக்கு ஆதாயமாக இருக்கும். செலவும் அதிகரிக்கும்.

ரிஷபம்

வளர்ச்சி குறைவான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கையையும் உறுதியையும் ஏற்படுத்திக்கொள்வது நல்லது. வேலையில் உற்சாகமான சூழல் இருக்காது. வேலை சூழலை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தினருடன் பிணைப்பு அதிகரிக்கும். கவனக் குறைவு காரணமாக பண இழப்பு ஏற்படலாம்.

மிதுனம்

ஓரளவுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கையைக் கைவிடக் கூடாது. வேலையில் சுறுசுறுப்பாக வெற்றிகரமாக செயல்படுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு நிலவும். குடும்பத்தில் வீண் விவாதம் எழ வாய்ப்புள்ளது. நிதி நிலை சுமாராக இருக்கும். செலவு அதிகரிக்கலாம்.

கடகம்

முயற்சிகள் வெற்றிபெறும் நாளாக இருக்கும். திட்டமிட்டு முயற்சிகள் செய்வதன் மூலம் வெற்றிகளைப் பெறுவீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் குறையும். வாழ்க்கைத் துணைவருடன் நேரத்தை ஒதுக்கி பேசுவது நல்ல பலனைத் தரும். நிதி நிலை சிறப்பாக இருக்காது. பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

சிம்மம்

ஆற்றல் மிக்க நாளாக இருக்கும். வெற்றி பெற முயற்சியை வைிடாமல் இருக்க வேண்டும். வேலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் குறையலாம். கணவன் மனைவி இடையே வார்த்தைகளில் கவனம் தேவை. நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். செலவும் அதிகரிக்கும்.

கன்னி

நற்பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். இன்றைய தினம் சில தடைகள் வந்து மறையும், கலங்கிட வேண்டாம். வேலையில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. இது உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படுவதைத் தடுக்கும். ஓரளவுக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் செலவும் அதிகரிக்கலாம்.

துலாம்

பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் அன்பு குறையலாம். கணவன் மனைவி இடையே புரிதலை ஏற்படுத்த முயல்வது நல்லது. நிதி நிலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.

விருச்சிகம்

பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். சில தடைகள் வந்து சோர்வை ஏற்படுத்தலாம். வேலையில் இறுக்கமான சூழல் காணப்படும். மனதில் தைரியத்தை வளர்த்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் சூடான விவாதங்கள் நடைபெறலாம். அமைதியாக இருப்பதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் மோதலைத் தவிர்க்கலாம். ஓரளவுக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

தனுசு

சுமாரான நாளாக இருக்கும். உடல் நலனில் கவனத்துடன் இருப்பது நல்லது. வீண் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. வேலையில் திறமை வெளிப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அனுசரணை அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்துக்காகச் செலவு செய்வீர்கள்.

மகரம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். மனதில் உறுதி அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம். பணியில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். உற்சாக மிகுதியால் சில தவறுகள் நேரலாம். கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு எழலாம். பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. நிதி நிலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.

கும்பம்

சுமாரான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். மனதில் கவலை அதிகரிக்கும். பணிச் சூழல் கடினமாக இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தின் வளர்ச்சி பற்றிய கவலை எழும். இதன் காரணமாக குடும்பத்தின் அமைதி பாதிக்கப்படலாம் என்பதால் வீண் சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

மீனம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்கள் செயல்களைக் கண்காணிப்பது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் ஓரளவுக்கு மகிழ்ச்சியான சூழல் நிலவும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது நல்லது. நிதி நிலை எற்ற இறக்கத்துடன் இருக்கும்.

toptamilnews.com