×

17-2-2021 தினப்பலன் – இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I மாசி 5 I புதன்கிழமை I பிப்ரவரி 17, 2021 இன்றைய ராசி பலன்! மேஷம் மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள, முக்கிய முடிவுகளை எடுக்க இன்றைய தினம் சிறந்ததாக இருக்கும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். திட்டமிட்டபடி பணியை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் – மனைவி இடையே இன்பம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்கும். ரிஷபம் முன்னேற்றமான நாளாக
 

சார்வரி வருடம் I மாசி 5 I புதன்கிழமை I பிப்ரவரி 17, 2021

இன்றைய ராசி பலன்!

மேஷம்

மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள, முக்கிய முடிவுகளை எடுக்க இன்றைய தினம் சிறந்ததாக இருக்கும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். திட்டமிட்டபடி பணியை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் – மனைவி இடையே இன்பம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றங்களைக் காண்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுமுகமான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. திருப்திகரமான நாளாக இருக்கும்.

மிதுனம்

சவாலான நாளாக இன்றைய தினம் இருக்கும். பயம், பதற்றமான மனநிலை உருவாகும். தன்னம்பிக்கை இழக்காமல் எதிர்கொள்ள வேண்டும். வேலையில் சில தொந்தரவுகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களால் பிரச்னை வரலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை இன்று உங்களுக்கு சாதகமாக இல்லை. வீண் செலவு ஏற்படலாம்.

கடகம்

இன்றைய தினம் சாதகமான நாளாக இருக்காது. மனக் கவலை அதிகரிக்கும். அமைதி குறையும். நிதானமாக இருந்து செயல்பட்டால் வெற்றிகள் கிட்டும். வேலைப் பளு அதிகரிக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படும். குடும்பத்தில் சூழல் சாதகமாக இருக்காது. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பண இழப்புக்கான வாய்ப்பு அதிகம்.

சிம்மம்

இன்று ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நம்பிக்கை அதிகரிக்கும். நிதி நிதி ஓரளவுக்குச் சாதகமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

கன்னி

உற்சாகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்றைய நாளில் முக்கிய முடிவுகள் எடுப்பது சரியாக இருக்கும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு உயரும்.

துலாம்

இன்று மிதமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவதன் மூலம் பாதகம் ஏற்படுவதைத் தடுக்கலாம். இன்றைய தினம் மனக் குழப்பம் ஏற்படும் என்பதால் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வேலை பளு அதிகரிக்கும். எதிர்பாராத பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் அதிகரிக்கலாம். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பண வரவு இருக்கலாம். அதற்கு ஏற்ப செலவும் இருக்கும்.

விருச்சிகம்

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். எந்த ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன்பும் யோசித்து, கவனத்துடன் செயல்பட வேண்டும். வேலையில் சின்ன சின்ன தடைகள் வரலாம். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை வரலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். கணவன் மனைவி இடையே தகராறு ஏற்படலாம். செலவு அதிகரிக்கும்.

தனுசு

இன்றைய தினம் சாதகமான நாளாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள், பெற்றோர், பெரியவர்கள் ஆதரவு கிட்டும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. செலவு அதிகரிக்கும்.

மகரம்

மனக் குழப்பம் மிகுந்த நாளாக இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்தத் தியானம் உள்ளிட்டவற்றைச் செய்யலாம். வேலை பளு அதிகரிக்கும். சின்ன சின்ன தவறுகள் நேரலாம் என்பதால் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு நிலவும். பண வரவுக்கு வாய்ப்பில்லை. ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.

கும்பம்

ஓரளவுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, மகிழ்ச்சி அதிகரிக்கும். எனவே, முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை, தொழில் சிறப்பாக இருக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

மீனம்

சந்தோஷமான நாளாக இன்றைய தினம் இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். வேலையில் முன்னேற்றமான சூழல் இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். செலவு சற்று அதிகரிக்கலாம்.