×

16-3-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இன்றைய நாள் இருக்கும்!

சார்வரி வருடம் I பங்குனி 3 I செவ்வாய்க்கிழமை I மார்ச் 16, 2021 16-3-2021 இன்றைய ராசி பலன்! மேஷம் முன்னேற்றமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை, தொழில் சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் குறையும். வரவும் செலவும் சரியாக இருக்கும். ரிஷபம் ஏற்ற இறக்கம் இல்லாத சமமான நாளாக இருக்கும். உண்மை நிலையை உணர்ந்து செயல்பட்டால் முன்னேற்றம் காண்பீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும்.
 

சார்வரி வருடம் I பங்குனி 3 I செவ்வாய்க்கிழமை I மார்ச் 16, 2021

16-3-2021 இன்றைய ராசி பலன்!

மேஷம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை, தொழில் சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் குறையும். வரவும் செலவும் சரியாக இருக்கும்.

ரிஷபம்

ஏற்ற இறக்கம் இல்லாத சமமான நாளாக இருக்கும். உண்மை நிலையை உணர்ந்து செயல்பட்டால் முன்னேற்றம் காண்பீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி குறையலாம். ஓரளவுக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

மிதுனம்

ஆதாயமான நாளாக இருக்கும். மன அமைதி அதிகரிக்கும். வேலை, தொழிலில் சாதகமான போக்கு இருக்கும். பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சிலருக்கு பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது.

கடகம்

சுறுசுறுப்பான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த காரியத்தை முன்கூட்டியே முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

அணுகுமுறையில் மாற்றங்களைச் செய்து முன்னேற்றத்துக்கான முயற்சியில் இறங்கினால் வெற்றி கிட்டும். வேலையில் சில தடைகளை சந்திக்க நேரிடலாம். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் குறையலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவு அதிகரிக்கும்.

கன்னி

சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும்.  வேலைப் பளு, சவால் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் அதை எதிர்கொள்ளலாம். கணவன் மனைவி இடையே நட்பான அணுகுமுறை அதிகரிக்கும். சிலருக்கு பண வரவுக்கான வாய்ப்புள்ளது. நிதி விஷயத்தில் ஏற்ற இறக்கம் காணப்படும்.

துலாம்

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். உங்கள் பொறுமை சோதிக்கப்படும் அளவுக்கு பிரச்னைகள் வரலாம். கவனம் தேவை. கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது.

விருச்சிகம்

ஏற்ற இறக்கம் சம அளவில் உள்ள நாளாக இருக்கும். வேலையில் சாதகமான பலனைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே இணக்கம் அதிகரிக்கும். நிதி நிலையை சமாளிக்கக் கடன் வாங்கும் சூழல் வரலாம். கவனம் தேவை.

தனுசு

முயற்சிகள் வெற்றி பெறும் நாளாக இருக்கும். வேலையில் சாதகமான சூழல் காணப்படும். உடன் பணிபுரிபவர்களுடன் நல்லுறவு நிலவும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நட்புறவு ஏற்படும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. அதற்கு ஏற்ப செலவுக்கும் வாய்ப்புள்ளது.

மகரம்

இன்று ஓரளவுக்கு நன்மையான நாளாக இருக்கும். நேர்மறையான எண்ணங்களை மனதில் வளர்த்துக்கொள்ள வேண்டும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது.  கணவன் மனைவி இடையே அன்பு குறையலாம். பண வரவுக்கு ஓரளவுக்கு வாய்ப்புள்ளது. நிதி நிலை சீராக இருக்கும்.

கும்பம்

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். பொறுப்புக்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் உடன் பிறந்தோர் வழியில் சச்சரவு வரலாம். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ஓரளவுக்கு நிதிநிலை சாதகமாக இருக்கும்.

மீனம்

சற்று அசௌகரியமான நாளாக இருக்கும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். வேலையில் இது எதிரொலிக்கும். பதற்றம் காரணமாகத் தவறுகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பண விவகாரம் சாதகமாக இருக்காது.

toptamilnews.com