×

14-5-2021 தினப்பலன் – சுறுசுறுப்பான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I சித்திரை 31 I வெள்ளிக்கிழமை I மே 13, 2021 14-05-2021 இன்றைய ராசி பலன்! 22-4-2021 இன்றைய ராசி பலன்! மேஷம் சுமாரான நாளாக இருக்கும். நிதானத்தைக் கடைப்பிடித்தால் இன்றைய தினம் வெற்றிகரமாக அமையும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தால் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிலை நிலை சாதகமாக இருக்காது. பணத் தட்டுப்பாடு இருக்கும். ரிஷபம்
 

பிலவ வருடம் I சித்திரை 31 I வெள்ளிக்கிழமை I மே 13, 2021

14-05-2021 இன்றைய ராசி பலன்!

22-4-2021 இன்றைய ராசி பலன்!

மேஷம்

சுமாரான நாளாக இருக்கும். நிதானத்தைக் கடைப்பிடித்தால் இன்றைய தினம் வெற்றிகரமாக அமையும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தால் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிலை நிலை சாதகமாக இருக்காது. பணத் தட்டுப்பாடு இருக்கும்.

ரிஷபம்

வீண் அலைச்சல் ஏற்படலாம். மனதில் குழப்பமான சூழல் இருக்கும். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. வேலையில் சாதனமான சூழல் இருக்காது. உடன் பணிபுரிபவர்களால் பிரச்னைகள் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை எதிர்பார்த்த அளவில் இல்லை. வீண் செலவு அதிகரிக்கும்.

மிதுனம்

பொறுப்பு அதிகரிக்கும். சௌகரியம் குறையும். வேலையில் கடினமான சூழல் நிலவும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத கடினமான சூழல் ஏற்படும். குடும்பத்தில் அமைதி குறையும். கணன் மனைவி இடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்க அனுசரித்து செல்வது நல்லது. பணத் தேவை அதிகரிக்கும். கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.

கடகம்

சுறுசுறுப்பான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும் நாளாக அமையும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். விரும்பியதைச் செய்வீர்கள்.

சிம்மம்

திடீர் பயணம் மேற்கொள்ளும் சூழல் ஏற்படலாம். பதற்றமான நாளாக இருக்கும். எனவே, முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை, தொழில் சூழல் சரியாக இல்லை. வேலைப் பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு ஏற்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. பண இழப்புக்கான வாய்ப்பு உள்ளது.

கன்னி

வெற்றிகரமான நாளாக இருக்கும். முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். பலவித சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேலையில் சாதகமான சூழல் காணப்படும். உங்களைத் தேடி பொறுப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு நிலவும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. அதே போல செலவுக்கும் வாய்ப்புள்ளது.

துலாம்

மந்தமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்க வேண்டாம். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. வேலையில் தொந்தரவுகள் வந்து சேரும். குடும்பத்தில் அமைதி நிலவ மற்றவர்களுடன் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. செலவு அதிகரிக்கும்.

விருச்சிகம்

உற்சாகமான நாளாக இருக்கும். உங்கள் செயல்களில் வெற்றிகளைப் பெறுவீர்கள். வேலை, தொழிலில் திருப்திகரமான மனநிலை இருக்கும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும்.

தனுசு

சுறுசுறுப்பான நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். அதே நேரத்தில் வேலைப் பளுவும் அதிகரிக்கும். குடும்பத்தில் சாதகமான சூழல் இருக்காது. மனம் விட்டுப் பேசுவதன் மூலம் கணவன் மனைவி இடையே பிணைப்பை ஏற்படுத்தலாம். செலவு அதிகரிக்கும்.

மகரம்

திட்டமிட்டு புத்திசாலித்தனத்துடன் செயல்படுவதன் மூலம் இன்றைய நாளை சாதகமான நாளாக மாற்றலாம். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் வரலாம். குடும்பத்தில் நல்லுறவைப் பராமரிப்பது கடினம். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. வீண் பண இழப்புக்கான வாய்ப்பு அதிகம்.

கும்பம்

சுமாரான நாளாக இருக்கும். மனதில் கவலை, குழப்பம் அதிகரிக்கும். வேலை சூழல் கடினமானதாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே நிதானம் குறைந்து மோதல் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

மீனம்

உற்சாகமான நாளாக இருக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பணத்தைச் சேமிப்பீர்கள்!