×

11-4-2021 தினப்பலன் – பணப் புழக்கம் சாதகமாக இல்லை!

சார்வரி வருடம் I பங்குனி 29 I ஞாயிற்றுக்கிழமை I ஏப்ரல் 11, 2021 இன்றைய ராசி பலன்! மேஷம் சுமாரான நாளாக இருக்கும். இன்று நிதானத்தை இழக்கும் சூழல் வரலாம், அமைதியாக இருப்பது நல்லது. வேலை, தொழில் சூழல் சாதகமாக இல்லை. திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் இதை எதிர்கொள்ளலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். பணப்புழக்கம் சாதகமாக இருக்காது. ரிஷபம் பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் வளர்ச்சிக்கான
 

சார்வரி வருடம் I பங்குனி 29 I ஞாயிற்றுக்கிழமை I ஏப்ரல் 11, 2021

இன்றைய ராசி பலன்!

மேஷம்

சுமாரான நாளாக இருக்கும். இன்று நிதானத்தை இழக்கும் சூழல் வரலாம், அமைதியாக இருப்பது நல்லது. வேலை, தொழில் சூழல் சாதகமாக இல்லை. திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் இதை எதிர்கொள்ளலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். பணப்புழக்கம் சாதகமாக இருக்காது.

ரிஷபம்

பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் வளர்ச்சிக்கான சூழல் நிலவும். திறமைக்கு உரிய பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

உற்சாகமான நாளாக இருக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை, தொழிலில் சிறப்பான பங்களிப்பை வழங்குவீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே திருப்தியான சூழல் நிலவும். நிதி நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

கடகம்

செயல்திறன் குறைவான நாளாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். இதன் காரணமாக மனதில் அழுத்தம் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் மன அழுத்தத்தை எதிர்கொள்ளலாம். குடும்பத்தில் அமைதியற்ற சூழல் காணப்படும். விட்டுக்கொடுப்பதன் மூலம் கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படுவதைத் தடுக்கலாம். சிலருக்கு நிதி வரவுக்கு வாய்ப்புள்ளது.

சிம்மம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனதில் கவனச்சிதறல் ஏற்படும். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறும் நிலை வரும். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். வீண் செலவு அதிகரிக்கும்.

கன்னி

பிரகாசமான வாய்ப்புகள் காணப்படும். இலக்குகளை அடைவீர்கள். வேலையில் வெற்றிகளைக் குவிப்பீர்கள். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாகக் காணப்படும். சேமிப்பு அதிகரிக்கும்.

துலாம்

சாதகமான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வளர்ச்சிகளைக் காண்பீர்கள். வேலையில் திருப்திகரமான மனநிலை நிலவும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழல் காணப்படும். நிதி வரவுக்கு வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

வெற்றி பெற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். இன்றைய நாளில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. பாதுகாப்பின்மையை உணர்வீர்கள். கணவன் மனைவி இடையே நல்லுறவு நிலவும். வீண் செலவு அதிகரிக்கும்.

தனுசு

தன்னம்பிக்கை, மன உறுதி அதிகரிக்கும். கடினமான சூழலையும் உறுதியுடன் எதிர்கொள்வீர்கள். வேலையில் கவனக்குறைவு காரணமாக தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே கோபம், மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. வீண் செலவு அதிகரிக்கும்.

மகரம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை, தொழிலில் செயல்திறன் அதிகரிக்கும். மகிழ்ச்சியான சூழல் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

கும்பம்

கடினமான சூழல் காணப்படும். நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். திட்டமிட்டு செயல்பட வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தில் குழப்பமான சூழல் இருக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. வீண் செலவு ஏற்படும்.

மீனம்

எந்த ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன்பும் சிந்தித்து தொடங்க வேண்டும். பணியிடச் சூழல் மகிழ்ச்சியாக இருக்காது. மனம் விட்டு பேசுவதன் மூலம் கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்கலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. கூடுதல் செலவுகள் ஏற்படும்.

toptamilnews.com