×

10-2-2021 இன்றைய தினப்பலன்!

சார்வரி வருடம் I தை 28 I புதன் கிழமை I பிப்ரவரி 10, 2021 இன்றைய ராசி பலன்! மேஷம் இன்று சாதகமான நாளாக இருக்காது. கவனமாக இருக்க வேண்டிய நாள். எதையும் அடைய போராட வேண்டியிருக்கும். வேலை பளு அதிகரிக்கும். திட்டமிட்டுச் செயல்பட்டால் மட்டுமே அதை சமாளிக்க முடியும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. செலவு விஷயத்தில் அதீத கவனம் தேவை.
 

சார்வரி வருடம் I தை 28 I புதன் கிழமை I பிப்ரவரி 10, 2021

இன்றைய ராசி பலன்!

மேஷம்

இன்று சாதகமான நாளாக இருக்காது. கவனமாக இருக்க வேண்டிய நாள். எதையும் அடைய போராட வேண்டியிருக்கும். வேலை பளு அதிகரிக்கும். திட்டமிட்டுச் செயல்பட்டால் மட்டுமே அதை சமாளிக்க முடியும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. செலவு விஷயத்தில் அதீத கவனம் தேவை.

ரிஷபம்

பாதுகாப்பின்மை உணர்வு இன்று அதிகரிக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம் இருக்கும். கூடுதல் பொறுப்பு உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் பிரச்னை எழலாம். அதைத் தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. பண வரவுக்கான வாய்ப்பு குறைவு. செலவு அதிகரிக்கும்.

மிதுனம்

மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் அன்றாட வேலையை குறித்த நேரத்துக்கு முன்னதாகவே முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

கடகம்

வளர்ச்சிக்குரிய நாள் இன்று. திட்டமிட்டு செயல்படுத்திய காரியங்கள் வெற்றி பெறும். நேர்மறையான எண்ணம் அதிகரிக்கும். சிலர் வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது. கடன் வாங்குவதில் கவனம் தேவை.

சிம்மம்

இன்றைய தினம் வெற்றிகரமாக அமைய சற்று போராட வேண்டியிருக்கும். மனக் குழப்பம் அதிகரிக்கும். அதை சமாளிக்க தியானம் உள்ளிட்டவற்றில் மனதை செலுத்தலாம். வேலை பளு அதிகரிக்கும். பதற்றம் மற்றும் குழப்பமான மனநிலை காரணமாக வேலையில் சிறு சிறு தவறுகள் நிகழலாம். குடும்பத்தில் பிரச்னை எழலாம். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு ஏற்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. கடன் பிரச்னை அதிகரிக்கும்.

கன்னி

எதிர்மறை சிந்தனைகள் உங்களை ஆட்கொள்ளும் தினமாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதன் மூலம் இதை சமாளிக்கலாம். வேலையில் சோர்வான மனநிலை அதிகரிக்கும். உங்கள் செயல்கள் காரணமாக குடும்பத்தின் மகிழ்ச்சி குறையலாம். எனவே, கவனமாக இருப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவு அதிகரிக்கும். செலவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம்

சுறுசுறுப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் அன்றாட பணிகளை விரைந்து முடிப்பீர்கள், வேலை தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய பொறுப்புக்கள் உங்களைத் தேடி வரும். அது மனநிறைவை அளிக்கும். கணவன் மனைவி உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் வெளியே செல்வீர்கள். நிதி நிலை சாதகமாக இருக்கும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

நிதமானமாக செயல்பட வேண்டிய நாள் இன்று. இலக்குகளை அடைய கூடுதல் உழைப்பு வழங்க வேண்டியிருக்கும். சூழலைச் சமாளிக்க பொறுமையுடன் இருப்பது அவசியம். வேலையில் சிரமம் ஏற்படும். எதிர்பாராத திடீர் பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதியின்மை நிலவும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவு அதிகரிக்கும்.

தனுசு

சாதகமான நாளாக இருக்காது. மனதில் அகந்தை அதிகரிக்கும். வேலை பளு அதிகரிக்கும். சமாளிக்க முடியாத அளவுக்கு பிரச்னைகள் வரலாம். எதையும் எதிர்கொள்ள மன வலிமையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அகந்தை காரணமாக குடும்பத்தில் பிரச்னை வரலாம். கணவன் மனைவி இடையே புரிதல் குறையும். நிதி நிலை சிறப்பாக இல்லை. பண இழப்புக்கான வாய்ப்பு அதிகம்.

மகரம்

மிதமான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் எண்ண ஓட்டம் அதிகரிக்கும். வேலை பளு அதிகரிக்கும். வேலைக்கு ஏற்ற பலன் குறைவாகவே கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் குறையும். உணர்ச்சிப் பெருக்கு காரணமாகக் கணவன் மனைவி இடையே உரசல் உண்டாகும். நிதி நிலை சுமுகமாக இல்லை. பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

கும்பம்

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வாய்ப்புகள் அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பயன் கிடைக்கும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு, பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

மீனம்

உங்கள் புத்திசாலித்தனம் காரணமாக இன்றைய தினம் வெற்றிகரமானதாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்கலாம். வேலை, தொழில் சிறப்பாக நடைபெறும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.