×

9-2-2021 தினப்பலன் – பெரும்பாலும் சுமாராகவே இருக்கும்!

சார்வரி வருடம் I தை 27 I செவ்வாய் கிழமை I பிப்ரவரி 9, 2021 இன்றைய ராசி பலன்! மேஷம் மனதில் அமைதியின்மை அதிகரிக்கும். சோர்வு, மனக் குழப்பம் அதிகரிக்கும். வெற்றி பெற திட்டமிட்டு புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும். வேலையில் தவறுகள் ஏற்பட்டு உயர் அதிகாரியின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் அமைதியின்மை நிலவும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. ரிஷபம் பொறுமையைச் சோதிக்கும் நாளாக இன்றைய தினம்
 

சார்வரி வருடம் I தை 27 I செவ்வாய் கிழமை I பிப்ரவரி 9, 2021

இன்றைய ராசி பலன்!

மேஷம்

மனதில் அமைதியின்மை அதிகரிக்கும். சோர்வு, மனக் குழப்பம் அதிகரிக்கும். வெற்றி பெற திட்டமிட்டு புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும். வேலையில் தவறுகள் ஏற்பட்டு உயர் அதிகாரியின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் அமைதியின்மை நிலவும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இல்லை.

ரிஷபம்

பொறுமையைச் சோதிக்கும் நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் எந்த ஒரு சூழலையும் சமாளிக்கலாம். வேலையில் உடன் பணி புரிபவர்களால் சில தொந்தரவு ஏற்படலாம். பிரச்னை ஏற்படாமல் இருக்க இன்றைய தினம் முழுவதும் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். குடும்பத்தில் பிரச்னை ஏற்படலாம். வீண் செலவு அதிகரிக்கும்.

மிதுனம்

இன்றைய நாள் மகிழ்ச்சியானதாக இருக்கும். நண்பர்கள், உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையை சுறுசுறுப்புடன் முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். ஓரளவுக்குப் பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது. பணத்தை சேமிப்பீர்கள்.

கடகம்

தெளிவான மனநிலை இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். இன்றைய தினம் உங்களுக்கானது என்பதால் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்கலாம். வேலையில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலையைப் பொறுத்தவரை இன்று அதிர்ஷ்டவசமான நாளாக இருக்கும்.

சிம்மம்

இன்று அதிர்ஷ்டத்தை விட உங்கள் அறிவுத் திறன் மீது அதிக நம்பிக்கை வைத்து செயல்பட்டால் வெற்றி கிட்டும். மனதில் குழப்பங்கள் வந்து செல்லும். வேலைப் பளு அதிகரித்தாலும் திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் அதை எதிர்கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒத்துழைப்பு அதிகரிக்கும். பண வரவுக்கான வாய்ப்பு சிறிது உள்ளது. செலவு செய்யும் போது கவனம் தேவை.

கன்னி

பதற்றம், குழப்பமான மன நிலை இருக்கும். எந்த முக்கியமான முடிவையும் இன்றைய தினத்தில் எடுக்க வேண்டாம். நண்பர்கள், உடன் உள்ளவர்களிடம் கலந்து பேசி செயலில் இறங்குவது நல்லது. மனக் குழப்பம் காரணமாக குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். உங்கள் மனதில் உள்ளதை மனைவியிடம் தெளிவாகக் கூறிவிட்டால் பிரச்னை தவிர்க்கப்படும். வரவுக்கும் செலவுக்கும் சம வாய்ப்பு உள்ளது.

துலாம்

இன்று சாதகமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை, மன உறுதி அதிகரிக்கும். வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமைக்கு ஏற்ற மரியாதை கிடைக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி பொங்கும். பண வரவுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கிடைத்த பணத்தைக் கொண்டு தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.

விருச்சிகம்

இன்றைய தினம்  சிறந்ததாக இருக்கும். அதன் மூலம் ஆறுதல் மற்றும் மனத் திருப்தி கிடைக்கும்.  விருப்பமில்லாத சூழல் ஏற்படும். அதை திறன்பட கையாள்வீர்கள். கணவன் மனைவி இடையே அமைதி நிலவும். பேசும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. செலவும் அதிகரிக்கும். எதற்காக செலவு செய்கிறோம் என்பதைக் கண்காணிப்பது நல்லது.

தனுசு

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். நாள் முழுக்க பல தடைகள் வந்து மறையும். இதன் காரணமாக வேலையில் தடுமாற்றம், தவறு நிகழலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி இடையே அமைதி நிலவ விட்டுக்கொடுப்பது நல்லது. செலவு அதிகரிக்கும்.

மகரம்

மாற்றமும், பயணங்களுக்கான வாய்ப்பும் இன்றைய தினம் காணப்படும். வழக்கமான வேலையை முடிப்பதில் கூட தாமதங்கள் காணப்படும். பணியிடத்தில் சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரும். உங்கள் துணையுடன் தொடர்பு கொள்வதில் பிரச்சினை காணப்படும். பண வரவு குறைவாக இருக்கும். பணத்தைத் தக்க வைத்துக் கொள்வது இன்று கடினமாக இருக்கும்.

கும்பம்

செழிப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்று முக்கிய முடிவுகளை எடுக்க சிறந்த நாளாக இருக்கும். வேலையில் வளர்ச்சி காணப்படும். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். துணைவருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். நிதி நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

மீனம்

இன்று முன்னேற்றகரமான நாள். ஆற்றலும் மன உறுதியும் நிறைந்து காணப்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்கலாம். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை விரைவாக முடிப்பீர்கள். கணவன் – மனைவி இடையே  பரஸ்பர மரியாதை நல்ல காணப்படும். இதனால் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்களின் பணம் சம்பாதிக்கும் ஆற்றல் உயரும். ஸ்திரமான நிதிநிலைக்கான வாய்ப்பு உள்ளது.