×

6-6-2021 இன்றைய ராசிபலன்!

பிலவ வருடம் I வைகாசி 23 I ஞாயிற்றுக்கிழமை I ஜூன் 6, 2021 இன்றைய ராசி பலன்! மேஷம் இன்று நிதானமாக செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். மனதில் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலை தொழில் சாதகமான சூழல் இருக்காது. வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் குறைந்து காணப்படும். கணவன் மனைவியிடையே வாக்குவாதம் எழலாம். செலவுகள் அதிகரிக்கும். ரிஷபம் சுமாரான நாளாக இருக்கும். சூழலுக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது. வேலை தொழில்
 

பிலவ வருடம் I வைகாசி 23 I ஞாயிற்றுக்கிழமை I ஜூன் 6, 2021

இன்றைய ராசி பலன்!

மேஷம்

இன்று நிதானமாக செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். மனதில் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலை தொழில் சாதகமான சூழல் இருக்காது. வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் குறைந்து காணப்படும். கணவன் மனைவியிடையே வாக்குவாதம் எழலாம். செலவுகள் அதிகரிக்கும்.

ரிஷபம்

சுமாரான நாளாக இருக்கும். சூழலுக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது. வேலை தொழில் சாதகமான சூழல் இருக்காது. பணிச்சுமை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையலாம். நிதி நிலை ஓரளவு சாதகமாக இருக்கும். பண விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை.

மிதுனம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். மகிழ்ச்சியுடன் சம்பவங்கள் நிகழும். வேலை தொழிலில் முன்னேற்றமான பலன்கள் காணப்படும். உங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. லாபகரமான நாளாக இருக்கும்.

கடகம்

சாதகமான நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி, தன்னம்பிக்கை, புத்துணர்வு அதிகரிக்கும். வேலை, தொழிலில் இனிமையான சூழல் இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

சிம்மம்

மகிழ்ச்சியான நாளாக இருப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. தேவையற்ற விஷயங்களை சிந்திப்பதை விடுப்பது நல்லது. வேலை மற்றும் தொழிலில் கவனக்குறைவு ஏற்படும். இதனால் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் – மனைவி இடையே நல்லுறவு நிலவும். நிதி நிலை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. திடீர் செலவு ஏற்படலாம்.

கன்னி

தன்னம்பிக்கை மிகுந்த நாளாக இருக்கும். உற்சாகமான மனநிலை இருக்கும். இதன் காரணமாக வேலை தொழிலில் கவனக்குறைவு ஏற்படலாம். வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது. வீண் செலவுகள் அதிகரிக்கும்.

துலாம்

சந்தோஷமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை மற்றும் தொழிலில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலில் இருக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். வேலைகளை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவியிடையே திருப்திகரமான உறவு நிலவும். கையிருப்பு அதிகரிக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

தனுசு

மந்தமான நாளாக இருக்கும். இலக்குகளை அடைவதில் தாமதம் ஏற்படும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். பணவரவுக்கான சாதகமான சூழல் இல்லை. செலவு அதிகரிக்கும்.

மகரம்

ஓரளவுக்கு வளர்ச்சியான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இந்த நாளை சாதகமானதாக மாற்றலாம். வேலைப்பளு அதிகரிக்கும். வேலையில் கவனக்குறைவு காரணமாக தவறுகள் நேரலாம் ஏற்படும். இதனால் உயரதிகாரியின் கோபத்திற்கு ஆளாகும் சூழல் வரலாம். குடும்பத்தில் அமைதி குறைந்த சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பணவரவுக்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது.

கும்பம்

சிறப்பான நாளாக இருக்கும். நண்பர்கள் உடன் பிறந்தவர்கள் ஆதரவு கிடைக்கும். வேலையை தொழில் திருப்திகரமான சூழல் நிலவும். உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சாந்தமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். பணப்புழக்கம் சிறப்பாக காணப்படும். சேமிப்பு அதிகரிக்கும்.

மீனம்

பலன் குறைந்த நாளாக இருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலை பளு அதிகரிக்கும். வேலைகளை திட்டமிட்டு செயல்படுத்துவது பலனைத் தரும். கணவன் மனைவி இடையே சுமுக உறவு பாதிக்கப்படலாம். வார்த்தைகளில் கவனம் தேவை. பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்புள்ளது. செலவு அதிகரிக்கும்.

toptamilnews.com