×

9 ஜனவரி 2021 ராசி பலன்: இந்த இரண்டு ராசிகாரர்களுக்கு இன்று பண வரவு உண்டு!

மேஷம் சாதகமான நாளாக அமையும். உங்கள் விருப்பம் நிறைவேறும் நாளாக அமையும். உங்கள் வேலைக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும்! ரிஷபம் அனுகூலமான நாளாக அமையும். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்… ஆனால் பலனைப் பெற பொறுமை மிகவும் அவசியம். செய்யும் காரியத்தில் தடைகள் ஏற்படலாம். எனவே, கவனத்துடன் செயல்பட்டால் தடையைத் தகர்த்தெரியலாம்! மனக் குழப்பம் ஏற்படும். இதனால், வேலையில், குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படலாம், கவனம் தேவை! மிதுனம் பயம், பதற்றம்
 

மேஷம்

சாதகமான நாளாக அமையும். உங்கள் விருப்பம் நிறைவேறும் நாளாக அமையும். உங்கள் வேலைக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும்!

ரிஷபம்

அனுகூலமான நாளாக அமையும். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்… ஆனால் பலனைப் பெற பொறுமை மிகவும் அவசியம். செய்யும் காரியத்தில் தடைகள் ஏற்படலாம். எனவே, கவனத்துடன் செயல்பட்டால் தடையைத் தகர்த்தெரியலாம்! மனக் குழப்பம் ஏற்படும். இதனால், வேலையில், குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படலாம், கவனம் தேவை!

மிதுனம்

பயம், பதற்றம் ஏற்பட்டு விலகும். எனவே, முக்கியமான முடிவுகள் இன்றைய தினத்தில் எடுக்க வேண்டாம். உழைப்புக்கேற்ற பலன் இல்லை என்ற வருத்தம் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும். பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள்.

கடகம்

வெற்றிகரமான நாளாக அமையும். எடுத்த காரியத்தை முடிப்பீர்கள். வேலை, தொழிலில் முன்னேற்றம் இருக்கும். எடுத்த காரியத்தை விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு இருக்கும்.

சிம்மம்

அதிகப்படியான வேலையால் கலைப்பு ஏற்படும் நாள் இன்று. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பது, நல்ல இசையைக் கேட்பது என்று இன்றைய நாளை மகிழ்ச்சியானதாக மாற்ற முடியும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். வீண் செலவுகள் ஏற்படும்.

கன்னி

மகிழ்ச்சியான நாளாக இன்றைய நாள் அமையும். முயற்சிகளுக்கு கைமேல் நல்ல பலன் கிடைக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்திலிருந்த மனக்குறைகள் நீங்கும். பண வரவு உண்டு!

துலாம்

கூடுதல் பொறுப்பு உங்களைத் தேடி வரும். இதனால் கூடுதல் சுமையை உணர்வீர்கள். பொறுமையாக திட்டமிட்டு இன்றைய நாளை அமைத்துக் கொள்வதன் மூலம் சுமைகளையும் சாதகமாக மாற்றிக்கொள்வீர்கள். குடும்பத்தில் கருத்து மோதல்கள், மன வருத்தங்கள் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

பல தடைகள் வந்தாலும் அவற்றை வெற்றிப் படிகளாக மாற்றும் தினம் இன்று. எதிர்பாராத அலுவலக பயணங்கள் ஏற்படலாம். அமைதியாக இருப்பதன் மூலம் குடும்பத்தில், வெளியில் மகிழ்ச்சியாக இருக்க முடியும். செலவு அதிகரிக்கும். பயம், பதற்றம் ஏற்பட்டு மறையும்.

தனுசு

இன்றைய தினம் ஓரளவுக்கு அனுகூலமாக இருக்கும். எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். வேலைகள் குவிந்துகொண்டே இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. பலன் இல்லை என்றாலும் எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓய மாட்டீர்கள். தேவைகள் அதிகரிக்கும். அதை எதிர்கொள்ளக் கடன் வாங்கும் நிலை வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மகரம்

எதிர்பாராத நன்மைகள் உங்களை வந்து சேரும். எதிர்பாராத விருந்தினர்கள் வந்து மகிழ்ச்சியைத் தருவார்கள். வேலை செய்யும் இடத்தில் தொழிலில் மகிழ்ச்சியாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செலவு அதிகரிக்கும். அதே நேரத்தில் பண வரவுக்கும் வாய்ப்புள்ளது!

கும்பம்

தன்னம்பிக்கை மிகுதியான நாளாக இன்றைய தினம் இருக்கும். அதிக வேலை காரணமாக ஓய்வின்றி உழைப்பீர்கள். குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் குறையும். இதுவே குடும்பத்தில் பிரச்னைக்கு காரணமாகிவிடலாம். வீண் செலவு ஏற்படலாம். நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் இன்றைய தினம் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க முடியும்.

மீனம்

சிந்தித்துச் செயல்படுவதன் மூலம் இன்றைய தினத்தை மிகவும் சாதகமான நாளாக அமைத்துக்கொள்ளலாம். பிரச்னைகள் பல வந்தாலும் அதை எளிதில் கையாண்டு சாதகமாக்கிவிடுவீர்கள். குடும்பத்தில் வீண் மன வருத்தங்கள் ஏற்பட்டு மறையும். குடும்பத்தினருடன் பொழுதை போக்குவது மகிழ்ச்சியைத் தரும். செலவுகள் ஏற்படும். பணப் பற்றாக்குறை இருக்கும். திட்டமிட்டு இன்றைய தினத்தை நல்ல நாளாக மாற்றுங்கள்!