×

24-2-2021 தினப்பலன் – உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I மாசி 12 I புதன்கிழமை I பிப்ரவரி 24, 2021 24-2-2021 இன்றைய ராசி பலன்! மேஷம் இன்றைய தினம் எதிர்பார்த்த அளவுக்கு சாதகமானதாக இருக்காது. மனக் குழப்பம் இருக்கும். தேவையற்ற பயம் காரணமாக வேலையில் நாட்டம் குறையும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஓரளவுக்கு பண வரத்து இருக்கலாம். செலவும் அதிகரிக்கும். ரிஷபம் சோதனையான நாளாக இன்றைய தினம் இருக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம். வேலை பளு
 

சார்வரி வருடம் I மாசி 12 I புதன்கிழமை I பிப்ரவரி 24, 2021

24-2-2021 இன்றைய ராசி பலன்!

மேஷம்

இன்றைய தினம் எதிர்பார்த்த அளவுக்கு சாதகமானதாக இருக்காது. மனக் குழப்பம் இருக்கும். தேவையற்ற பயம் காரணமாக வேலையில் நாட்டம் குறையும்.  கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஓரளவுக்கு பண வரத்து இருக்கலாம். செலவும் அதிகரிக்கும்.

ரிஷபம்

சோதனையான நாளாக இன்றைய தினம் இருக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம். வேலை பளு அதிகரிக்கும். சரியான நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன் – மனைவி இடையே உறவு மேம்படும்.  பண வரவுக்கு ஓரளவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

மிதுனம்

இன்றைய தினம் நிதானமாகப் பொறுமையாக இருப்பது நல்லது. மனதில் பயம், பதற்றம் அதிகரிக்கும். வேலை அதிகமாக இருக்கும். குழப்பமான மனநிலை காரணமாக வேலையில் சிறு தவறுகள் ஏற்படலாம். கணவன் – மனைவி இடையே உணர்ச்சிப் பெருக்கு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. கடன் வாங்கும் நிலை ஏற்படலாம்.

கடகம்

இன்றைய தினம் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். வேலையில் தவறுகள் நேரிடலாம். எனவே, கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும்.

சிம்மம்

நிதானத்தை கடைப்பிடிப்பதன் மூலம் இன்றைய நாளை சாதகமானதாக மாற்றலாம். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டு கிடைக்கும். கணவன் – மனைவி இடையே நல்லிணக்கம் குறையும். நிதி விவகாரம் சாதகமாக இல்லை. செலவுகள் அதிகரிக்கும்.

கன்னி

சுறுசுறுப்பான, உற்சாகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரிகளுடன் நல்லுறவு மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  கணவன் – மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். நிதி நிலை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. கடன் வாங்கி செலவு செய்யும் சூழல் வரலாம்.

துலாம்

அற்புதமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழிலில் சாதகமான நிலையை இருக்காது. வேலை அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இதை சமாளிக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

ஓரளவுக்கு வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் கவலைகள் வந்து வெற்றியை பாதிக்கச் செய்யும் என்பதால் கவனம் தேவை. மனக் கவலை காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். திடீர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு வரலாம். செலவு அதிகரிக்கும்.

தனுசு

அதிர்ஷ்டம் குறைவான நாளாக இன்றைய தினம் இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். வேலையில் தாமதம் ஏற்படும். உடன் பணி புரிபவர்கள் ஆதரவு கிடைக்காது. கணவன் – மனைவி இடையே நட்பு போக்கு ஏற்படும்.  வீண் செலவு அதிகரிக்கும்.

மகரம்

இன்று சிறப்பான நாளாக இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். வேலையில் கூடுதல் பொறுப்புக்கள் உங்களைத் தேடி வரும். கணவன் மனைவி இடையே புரிதல், மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் காணப்படும். பணத்தை சேமித்து செலவு செய்வது நல்லது.

கும்பம்

உற்சாகமான நாளாக இருக்கும். புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். வேலை அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் ஏற்படும். கடன் வாங்க வேண்டிய சூழல் வரலாம். பண இழப்பு ஏற்படாமல் இருக்க கவனத்துடன் இருப்பது நல்லது.

மீனம்

நிதானத்தை அதிகம் கடைபிடிக்க வேண்டிய நாள் இன்று. வீண் பேச்சு காரணமாக பிரச்னைகள் வரலாம். குறித்த நேரத்தில் வேலையை முடிப்பீர்கள். உற்சாகத்துடன் வேலையில் ஈடுபடுவீர்கள். கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.