×

10-4-2021 தினப்பலன் – நிதி நிலை சாதகமான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I பங்குனி 28 I சனிக்கிழமை I ஏப்ரல் 10, 2021 10-4-2021 இன்றைய ராசி பலன்! மேஷம் சிறப்பான நாளாக இருக்கும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். வேலையில் சாதகமான சூழல் காணப்படும். கடின உழைப்பை வெளிப்படுத்தினால் வெற்றிகள் பெற முடியும். குடும்பத்தில் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே அனுசரித்து நடப்பது நல்லது. வீண் செலவுகள் அதிகரிக்கும். ரிஷபம் வாய்ப்புகள் தேடி வரும் நாளாக இருக்கும். அதைப் பயன்படுத்திக்கொண்டால்
 

சார்வரி வருடம் I பங்குனி 28 I சனிக்கிழமை I ஏப்ரல் 10, 2021

10-4-2021 இன்றைய ராசி பலன்!

மேஷம்

சிறப்பான நாளாக இருக்கும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். வேலையில் சாதகமான சூழல் காணப்படும். கடின உழைப்பை வெளிப்படுத்தினால் வெற்றிகள் பெற முடியும். குடும்பத்தில் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே அனுசரித்து நடப்பது நல்லது. வீண் செலவுகள் அதிகரிக்கும்.

ரிஷபம்

வாய்ப்புகள் தேடி வரும் நாளாக இருக்கும். அதைப் பயன்படுத்திக்கொண்டால் வெற்றிகள் பெறுவீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே திருப்தியான சூழல் நிலவும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. வீண் செலவு ஏற்படலாம்.

மிதுனம்

சுறுசுறுப்பான நாளாக இருக்கும். புதிய தொடர்புகள் ஏற்படும். வேலைச் சூழல் சாதகமாக இருக்கும். வேலையை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப்புழக்கம் காணப்படும்.

கடகம்

சுமாரான நாளாக இருக்கும். ஆன்மிகம் மற்றும் பொழுதுபோக்கில் ஈடுபடுவதன் மூலம் மனம் அமைதி அடையும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். வேலையில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. செலவும் அதிகரிக்கும்.

சிம்மம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலையில் ஓரளவுக்கு சாதகமான சூழல் காணப்படும். வேலையில் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பணப்புழக்கம் சாதகமாக இல்லை. வீண் பண இழப்பு ஏற்படலாம்.

கன்னி

வெற்றிகரமான நாளாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை, தொழிலில் சிறப்பான சூழல் நிலவும். வேலையை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

துலாம்

ஓரளவுக்கு திருப்திகரமான நாளாக இருக்கும். உங்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்த வேண்டி இருக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் அமைதி சற்று குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

விருச்சிகம்

இன்றைய தினம் சாதகமானதாக அமைய நீங்கள்தான் முயற்சி செய்ய வேண்டும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். வார்த்தைகளில் கவனம் தேவை. நிதி நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் அதிகரிக்கும்.

தனுசு

சுமாரான நாளாக இருக்கும். தான தர்மம், ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மகிழ்ச்சியைத் தரும். வேலையில் திருப்தியான சூழல் இருக்காது. உடன் பணிபுரிபவர்களால் கவலை அதிகரிக்கும். குடும்பத்தில் புரிதல் இருக்கும். கணவன் மனைவி இடையே நல்லுறவு நிலவும். நிதி நிலை சாதகமாக இல்லை. சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவும் அதிகரிக்கும்.

மகரம்

சாதகமான நாளாக இருக்கும். எதிர்பாராத நன்மைகள் நடக்கும். வேலை, தொழிலில் மிதமான சாதகம் காணப்படும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் அன்பு குறையும். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

கும்பம்

சிறந்த பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். திறமை வெளிப்படும். வேலையில் சாதகமான சூழல் காணப்படும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மோதல் போக்கு ஏற்படலாம். மகிழ்ச்சியைத் தக்க வைக்க அனுசரித்து நடப்பது நல்லது. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவு அதிகரிக்கும்.

மீனம்

ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இன்றைய நாள் சாதகமாக அமைய சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் சாதகமான சூழல நிலவும். சிறப்பாகச் செயலாற்றுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். பண இழப்பு நிகழலாம் இருக்கக் கவனத்துடன் இருப்பது நல்லது.

toptamilnews.com