முதல்வர் ஸ்டாலினுக்கு தினகரன் வைக்கும் கோரிக்கை!

 

முதல்வர் ஸ்டாலினுக்கு தினகரன் வைக்கும் கோரிக்கை!

சுருக்கு மடி வலை விவகாரத்தில் மீனவர்களை தமிழக அரசு அழைத்துப் பேச வேண்டும் என தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு தினகரன் வைக்கும் கோரிக்கை!

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சுருக்கு மடி வலை விவகாரத்தில் போராடும் மீனவர்களை மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை உள்ளது. இதை கண்டித்து மீனவர்கள் கடலூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் போராட்டம் நடத்தினர். சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க கோரி கடலூர், தேவனாம்பட்டினம், முதுநகர், ராசாப்பேட்டை உள்ளிட்ட பகுதி மீனவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தைப் பொருத்தவரை மூன்றாவது நாளாக நேற்று மீனவர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அரசு சார்பில் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டை மற்றும் அடையாள அட்டை உள்ளிட்ட வற்றை அவர்கள் தாசில்தாரிடம் ஒப்படைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு அழைத்துப் பேசி உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன். கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இதற்காக மீனவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களால் அப்பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இதனை அரசு நிர்வாகம் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது சரியானதல்ல. மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் நம்முடைய மீனவர்கள் பாதிக்கப்படாத அளவுக்கு சுருக்குமடி வலை பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.