சசிகலாவுக்காக காலியாக இருக்கும் ‘அமமுக தலைவர்’ பதவி!

 

சசிகலாவுக்காக காலியாக இருக்கும் ‘அமமுக தலைவர்’ பதவி!

நெருங்கி வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் அரசியல் களத்தை அதிரி புதிரியாக மாறியுள்ளது. தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, விருப்ப மனு பெறுதல் என அரசியல் கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமமுக, அதிமுகவை எதிர்த்து களம் காண தயாராகி வருகிறது. இன்று காலை அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 10 இடங்களில் காணொளி வாயிலாக நடைபெற்றது.

சசிகலாவுக்காக காலியாக இருக்கும் ‘அமமுக தலைவர்’ பதவி!

அதில், டிடிவி தினகரனை அரியணை ஏற்ற உழைக்க வேண்டும் என்றும் அதிமுகவை மீட்க வேண்டும் என்றும் கூட்டணி பற்றிய முடிவுகளை எடுக்க தினகரனுக்கு உரிமை வழங்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் மூலமாக, சட்டமன்றத் தேர்தலில் தினகரன் முதல்வர் வேட்பாளராக போட்டியிடப்போவது உறுதியானது. இருந்தாலும், சசிகலா எந்த பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்படாதது புரியாத புதிராகவே இருக்கிறது.

சசிகலாவுக்காக காலியாக இருக்கும் ‘அமமுக தலைவர்’ பதவி!

ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுகவை தனது கட்டுக்குள் கொண்டு வந்த சசிகலாவுக்கே, அதிமுகவில் இடமில்லை என கூறிவிட்டனர். இருப்பினும் தனது உரிமையை விட்டுக் கொடுக்காத சசிகலா, அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பதவியை மீட்டெடுக்க வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த நிலையில், சசிகலா சட்டப் போராட்டம் நடத்தி வருவதால் அமமுக தலைவர் பதவி சசிகலாவுக்காக காலியாக வைக்கப்பட்டுள்ளது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சசிகலாவுக்காக காலியாக இருக்கும் ‘அமமுக தலைவர்’ பதவி!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூன்றாவது அணி இல்லை. அமமுக அமைக்கும் அணி தான் முதல் அணி. எங்களது அணியில் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் வருமா என இப்போது கூற முடியாது என்று கூறினார். சட்டப் போராட்டத்தில் வென்று சசிகலா தனது உரிமையை மீட்டெடுக்கிறாரா? அல்லது அமமுக தலைவராகிறாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.