அதிமுக அமைச்சர்களுக்கு செக்… டஃப் கொடுக்கும் டிடிவி தினகரன்!

 

அதிமுக அமைச்சர்களுக்கு செக்… டஃப் கொடுக்கும் டிடிவி தினகரன்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் அதிரடியாக களமிறங்கிய டிடிவி தினகரன், அண்மையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதில் டிடிவி தினகரன் இடம் பெறவில்லை. இதையடுத்து, நேற்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதன் படி, டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜுவை எதிர்த்து களம் காணவிருப்பது தெரிய வந்தது.

அதிமுக அமைச்சர்களுக்கு செக்… டஃப் கொடுக்கும் டிடிவி தினகரன்!

கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதியாக இருந்த கோவில்பட்டியில், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அதிமுகவே வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு தினகரன் போட்டியிடுவதால் போட்டி இன்னும் கடுமையாகி இருக்கிறது. இந்த நிலையில், அமமுகவின் 130 வேட்பாளர்கள் கொண்ட மூன்றாம் கட்ட பட்டியலை டிடிவி தினகரன் வெளியிட்டுகிறார்.

அதிமுக அமைச்சர்களுக்கு செக்… டஃப் கொடுக்கும் டிடிவி தினகரன்!

அதன் படி, ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரை எதிர்த்து சி.பி ராமஜெயமும் ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜியை எதிர்த்து காளிமுத்துவும் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து கார்த்தி பிரபாகரனும் போட்டியிடுகிறார்கள். அதே போல, இன்று காலை திமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்த அய்யா துரை பாண்டியனுக்கு கடையநல்லூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சசிகலாவுடன் சேர்ந்து அதிமுகவை கைப்பற்ற வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கும் டிடிவி தினகரன், அதிமுக அமைச்சர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக அமமுகவின் முக்கிய வேட்பாளர்களை களமிறக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.