கடன் வாங்கி தற்கொலைக்கு முயன்றவரை ரூ.1000 கோடிக்கு அதிபதியாக்கிய ‘அம்மன்’ – கோவிலுக்கு ரூ 526 கோடி காணிக்கை

 

கடன் வாங்கி தற்கொலைக்கு முயன்றவரை ரூ.1000 கோடிக்கு அதிபதியாக்கிய ‘அம்மன்’ – கோவிலுக்கு ரூ 526 கோடி காணிக்கை

கடனுக்கு மேல் கடன் வாங்கி, தற்கொலைக்கு முயன்றவர், கடந்த 3 ஆண்டுகளில் 1,000 கோடிக்கும் மேல் அதிபதியாகிவிட்டார்..இதுக்கு காரணம் “நான் இல்லை எல்லாம் அந்த அம்மன்தான்” என்று சொல்லி அந்த அம்மன் கோவிலுக்கு மட்டுமல்ல. அந்த அம்மன் குடியிருக்கும் ஊருக்கே ரூ 526 கோடி நன்கொடை அளித்து பரவசப்படுத்தியுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்தவர் கணஸ்ராவன். வயது 28. பிரபல வைர வியாபாரி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இவரது வைர வியாபாரம் திடீர் என ஒளியிழந்து விட்டது. ஆம் வியாபாரம் படுத்த படுக்கையாகி விட்டது. தனது தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக எங்கெல்லாமோ கடன் வாங்கினார். மேலும், மேலும் நஷ்டமாகியதுடன் கடனுக்கு மேல் கடன் வாங்கியதால் வட்டி கட்டவும் முடியாமல் தற்கொலை முடிவுக்கே சென்று விட்டார்..

கடன் வாங்கி தற்கொலைக்கு முயன்றவரை ரூ.1000 கோடிக்கு அதிபதியாக்கிய ‘அம்மன்’ – கோவிலுக்கு ரூ 526 கோடி காணிக்கை


நண்பர் ஒருவரது யோசனையின் பேரின் கேரள மாநிலம் சோட்டாணிக்கரையில் உள்ள பகவதியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார். அம்மனை மனமுருக வேண்டியுள்ளார். பின்னர் சொந்த ஊருக்குச் சென்று விட்டார். என்ன நடந்ததோ தெரியவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் அவரது தொழில் வேகமாக வளரஆரம்பித்தது… மள, மளவென முன்னேறிய அவர் கடன்களையெல்லாம் அடைத்து மேலும் ரூ 1,000 கோடிக்கு அதிபதியாகி விட்டர்.
வைரத் தொழில் ஒரு பக்கம் வளர, வளர கணஸ்ராவன் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் சோட்டடாணிக்கரை பகவதியம்மன் கோவிலுக்கு வந்து போனார். இதன் மூலம் கோவிலில் உள்ளவர்கள் அவருடன் நன்கு பரிச்சயமாகி விட்டார்கள். இந்நிலையில் சோட்டடாணிக்கரை பகவதியம்மன் கோவிலையும், சுற்றியுள்ள ஊரையும் சோட்டானிக்கரை நகரத்தையும் புணரமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் போதிய நிதி வசதி இல்லாததால் இந்த திட்டம் நீண்டுகொண்டே சென்றது.
இந்நிலையில் வழக்கம் போல கடந்த மாதம் கோவிலுக்கு வந்த கணஸ்ராவன் விஷயம் கேள்விப்பட்டு, கோவிலைப் புணரமைக்கத் தான் தயாராக இருப்பதாகக் கூறினார்.ஏதோ ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ தருவார் என எதிர்பார்த்த கோவில் நிர்வாகத்தினரிடம் மொத்தச் செலவையும் கேட்டு, அதற்குறிய ரூ 300 கோடியையும் தான் தருவதாக கூறி கோவில் குருக்களை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினார்.

கடன் வாங்கி தற்கொலைக்கு முயன்றவரை ரூ.1000 கோடிக்கு அதிபதியாக்கிய ‘அம்மன்’ – கோவிலுக்கு ரூ 526 கோடி காணிக்கை


இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட கோவில் நிர்வாகிகள் கோவில் புணரமைப்பு பணிகளுடன் சோட்டானிக்கரை நகரத்தையும் புணரமைக்கும் திட்டம் இருப்பதால் அதற்கும் சேர்த்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதற்கும் சம்மதம் தெரிவித்த கணஸ்ராவன், இரண்டுக்கும் சேர்த்து ரூ 526 கோடி தரச் சம்மதித்தார். இதனால் பரவசமடைந்த கோவில் நிர்வாகிகள் உடனடியாக இதுகுறித்து கொச்சியில் உள்ள தமைமை தேவசம் போர்டுக்கும், கேரள அரசுக்கும் தகவல் தெரிவித்தனர். இதற்கு கேரள அரசு ஒப்புதல் அளித்த நிலையில். இது தொடர்பாகக் கேரள உயர் நீதிமன்றத்திடமும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் விரைவில் தொடங்கும் எனக் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கடன் வாங்கி தற்கொலைக்கு முயன்றவரை ரூ.1000 கோடிக்கு அதிபதியாக்கிய ‘அம்மன்’ – கோவிலுக்கு ரூ 526 கோடி காணிக்கை


இது பற்றி கணஸ்ராவன் கூறும்போது. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு எனது வைரத்தொழில் நலிவடைந்து விட்டது. கடனுக்கு மேல் கடன் வாங்கினேன். தற்கொலை முடிவுக்குக் கூட வந்து விட்டேன். அப்போதுதாதான் எனது ஆன்மீக குருவைச் சந்தித்து எனது கஷ்டங்கள் பற்றிக் கூறினேன். சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து விட்டு வருமாறு கூறினார். இதன்படி சோட்டானிக்கரை சென்று சாமி தரிசனம் செய்தேன். அதன் பிறகு என்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.. வியாபாரம் வளர்ச்சி அடைந்தது. கோடிகள் குவிந்தன. இதுக்கு காரணம் நான் இல்லை எல்லாம் அந்த அம்மன்தான். அந்த நன்றிக் கடனை செலுத்துவதற்காகவே சோட்டானிக்கரை கோவில் புணரமைப்பு பணிகளுக்காக நான் செலவிட முன்வந்தேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்..