‘குறைந்த விலையில் விற்கப்பட்ட அம்மா சிமெண்ட்’: விலையை உயர்த்தியது தமிழக அரசு!

 

‘குறைந்த விலையில் விற்கப்பட்ட அம்மா சிமெண்ட்’: விலையை உயர்த்தியது தமிழக அரசு!

அரசு சார்பில் விற்கப்படும் அம்மா சிமெண்ட் மூட்டைகளின் விலை ரூ.216 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில், அரசு கொண்டு வந்த திட்டங்களுள் சிமெண்ட் திட்டமும் ஒன்று. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசு சிமெண்ட் கழகம் சார்பில் அம்மா சிமெண்ட் விற்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த விலையிலேயே சிமெண்ட் மூட்டைகள் விற்கப்பட்டு வருகின்றன.

‘குறைந்த விலையில் விற்கப்பட்ட அம்மா சிமெண்ட்’: விலையை உயர்த்தியது தமிழக அரசு!

இந்த திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், ஒரு முறை கூட விலை உயர்த்தப்பட்டது இல்லை. இந்த நிலையில் தற்போது மூலப்பொருட்கள், டீசல், ஊழியர்கள் ஊதியம் என அனைத்தும் உயர்ந்திருப்பதால் சிமெண்ட் மூட்டையின் விலையை அரசு அதிகரித்துள்ளது. ரூ.190க்கு விற்கப்பட்டு வந்த சிமெண்ட் மூட்டை தற்போது ரூ.216க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருந்தாலும், விலை உயர்த்துவதற்கு முன்னர் சிமெண்ட் வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு பழைய விலையில் சிமெண்ட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.