“பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு முன்னோடி மகாகவி பாரதியார்” : அமித்ஷா தமிழில் ட்வீட்!

“பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு முன்னோடி மகாகவி பாரதியார்” : அமித்ஷா தமிழில் ட்வீட்!

சுப்பிரமணிய பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அரசியல் தலைவர்களும் பொதுமக்களுக்கும் பாரதியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

“பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு முன்னோடி மகாகவி பாரதியார்” : அமித்ஷா தமிழில் ட்வீட்!

பாரதியாரை நினைவுக் கூறும் விதமாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின், ‘என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’ என்ற அவரது வரிகள் நாட்டு நிலைமையை நினைவூட்டுகிறது என பதிவிட்டிருந்தார். அதே போல முதல்வர் பழனிசாமியும் தனது ட்விட்டர் பக்கத்தில், “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று அன்றே முழங்கிய முண்டாசுக் கவி என பதிவிட்டிருந்தார்.

“பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு முன்னோடி மகாகவி பாரதியார்” : அமித்ஷா தமிழில் ட்வீட்!

இவ்வாறு தலைவர்கள் பலர் பதிவிட்டு வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாரதியாரின் பிறந்தநாள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “பாரத தாயின் புதல்வன் மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்களின் ஜெயந்திக்கு எனது அஞ்சலி. இவர் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு முன்னோடி ஆவார். பாரதி தேசிய ஒற்றுமையின் சின்னமாக விளங்கினார். இவரின் தேசபக்தி கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தின் போது மக்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்தன” எனக் குறிப்பிட்டுள்ளார்.