Home சினிமா அமித்ஷாவுடன் சந்திப்பை ரஜினி தவிர்க்க போவது இப்படித்தான்!

அமித்ஷாவுடன் சந்திப்பை ரஜினி தவிர்க்க போவது இப்படித்தான்!

ஒவ்வோர் ஆண்டும் துக்ளக் விழா பொங்கல் பண்டிகையின்போது நடக்கும். அப்போது நடக்கும் விழாவில் பெரும்பாலும் பாஜக தலைவர்கள் கலந்துகொள்வார்கள். 2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன் நடந்த துக்ளக் விழாவில் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய சோ, நரேந்திர மோடியின் பெயரை பிரதமர் வேட்பாளருக்கு முன் மொழிந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் கலந்துகொள்வதும், அதில் பேசுவதும் அவ்வப்போது நடக்கும். இந்த ஆண்டு துக்ளக் விழா ஜனவரி 14 அன்று சென்னை கலைவாணர் அரங்கரத்தில் நடத்த துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி திட்டமிட்டுள்ளார். இந்த விழாவில் பாஜகவின் மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா கலந்துகொள்கிறார்.

துக்ளக் விழாவுக்கு வரும் அமித்ஷா நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்குச் சென்று அவரை நலம் விசாரிக்கச் செல்வார் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்த் சமீபத்தில்தான் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று தெளிவான அறிக்கை மூலம் தன் நிலையை வெளிப்படுத்தியிருந்தார். ரஜினியின் வருகையை வெகு ஆவலாக எதிர்பார்த்தது பாஜகதான். அதனால், ரஜினியின் முடிவால் கடும் ஏமாற்றம் அடைந்ததும் பாஜகதான்.

இந்நிலையில் ஒருவேளை ரஜினியை அமித்ஷா சந்திக்கும்பட்சத்தில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க கோருவார் என்று தெரிகிறது. பிரசாரத்திற்கே அழைக்கும் திட்டமும் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது முடியாவிட்டால் நான்கைந்து வீடியோக்கள் எடுக்கவும் திட்டமிருக்கின்றன என்று கூறப்படுகிறது.

இவை எதுவும் சாத்தியம் இல்லையென்றால், பாஜக தலைவர்கள் அடிக்கடி அவரைச் சந்தித்துப் பேசுவதும், போட்டோக்களை எடுப்பதுமாக தொடர்ந்து வெளியிடும் வகையில் சில ஏற்பாடுகள் நடக்கின்றன்வாம். அதாவது பாஜகவுக்கு ரஜினியின் ஆதரவு இருக்கிறது என்பதை எப்படியாவது வாக்காளர்களுக்குக் கடத்த வேண்டும் என்பதே பாஜகவுன் செயற்திட்டம் என்று கூறப்படுகிறது.

தன்னை வீடு தேடி வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்காமல் இருக்க முடியாது ரஜினியால். ஆனால், தம் மீது மீண்டும் அரசியல் சாயம் விழுவதைத் தவிர்க்கவே ரஜினி விரும்புகிறாராம். எனவே, ஜனவரி 14 -ம் தேதிக்கு முன் ரஜினி அமெரிக்காவுக்கு அல்லது பெங்களூருக்குச் செல்லும் திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பொங்கலுக்கு ரசிகர்கள் வருவதைத் தவிர்க்கவும், அமித்ஷாவைச் சந்திப்பதிலிருந்து விடுபடவும் இந்த உத்தி உதவும் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்த எஸ்பிஐ!

கொரோனா ஊடரங்கு காரணமாக தொழில்கள் முடங்கியதுடன் , பலருக்கும் வேலை இழப்பு, தொழில் முடக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு வருவாய் பாதிக்கப்பட்டது.இந்த நிலையில், வங்கிக் கடன் வாங்கியவர்களுக்கு 6 மாதங்கள்...

பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? திருமாவளவன் பளீர்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி, தொகுதி பங்கீடுபோன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதிமுக பாமகவுடனான...

எம்.ஜி.ஆர். வழி செல்லும் கமல்ஹாசன்!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதி, மயிலாப்பூர் , திநகர் மற்றும் ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று அதிமுக,...

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி! ஓவைசி அதிரடி

தமிழகத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிமுக - திமுக என இருகட்சிகளுக்குமே சென்றாலும், முஸ்லீம்களின் வாக்குகள் பெரும்பாலும் திமுகவுக்கே சாதகமாக அமைந்து வருகின்றன. அதற்கு திமுகவுடன் உள்ள கூட்டணி கட்சிகளான மனிதநேய...
TopTamilNews