அமித்ஷா அதிரடி – அலறும் திமுக

 

அமித்ஷா அதிரடி – அலறும் திமுக

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்குப் பின்னர் தமிழக அரசியல் அரங்கில் அனல் வீசத் தொடங்கியுள்ளது. அதிலும் எதிர்க் கட்சியான திமுகவில் ஏக உஷ்ணம். ‘’ இனி தமிழ்நாட்டின் மீதுதான் எனது கண் இருக்கும்’’ என்கிற அமித்ஷாவின் பிரகடனத்தைக் கேட்டதிலிருந்து திமுக நிர்வாகிகள் கதி கலங்கிப் போயிருக்கிறார்கள்.
தொடர்ந்து 10 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாத போதிலும் ஆளும் கட்சிகளுக்கு இணையாகவே திமுக பணத்தை அள்ளியிறைத்து வருகிறது. இந்த விஷயத்தில் அகில இந்திய அளவில் திமுகவை நெ1 கட்சி என்றே கூறலாம். நீண்ட காலத்திற்கு முன்பு ஆட்சியிலிருந்தாலும் அப்போது கணக்கு வழக்கில்லாமல் வாரிக் குவித்ததே இதன் பின்னணியாகும்.

அமித்ஷா அதிரடி – அலறும் திமுக


கட்சித் தலைவர் ஸ்டாலின் குடும்பம் தொடங்கி பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு, முதன்மைச் செயலாளர் நேரு என மேல்மட்ட நிர்வாகிகள் அனைவருமே அள்ள அள்ள குறையாத அட்சயப் பாத்திரங்களாகவே இருந்து வருகின்றனர். இந்த பட்டியலில் உள்ள மேலும் பல திமுக நிர்வாகிகளின் சொத்துக்கள், பணப்பரிவர்த்தனைகள் ஆகியவற்றை வருமான வரித்துறையினர் கடந்த பல மாதங்களாக கண்காணித்து, விபரங்களை திரட்டி வருகின்றனர். இது தவிர இவர்கள் செய்துள்ள சட்ட விரோதமான அந்நிய முதலீடுகள் பற்றி அமலாக்கத்துறையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் பாதி கிணறு தாண்டியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அமித்ஷா அதிரடி – அலறும் திமுக


இதன் அடிப்படையில் வரும் டிசம்பர் முதல் வாரம் தொடங்கி திமுக புள்ளிகளை இலக்கு வைத்து மத்திய அமைப்புகள் சாட்டையை சுழற்ற இருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்டாலினின் உள்வீடு வரை இந்த நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். சாதாரண ஒரு நடுத்தர குடும்பத்திலிருந்து வந்து இன்றைக்கு கோடிகளில் மிதக்கும் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மத்திய அமைப்புகளின் கிடுக்கிப்பிடியில் சிக்கப்போவது நிச்சயம் என்கிறார்கள் இவர்கள். டிசம்பரில் தொடங்கி ஜனவரி வரை நீளும் இந்த அதிரடி ஆபரேஷன் திமுகவை அடியோடு ஆட்டம் காணச் செய்யும் என்று கூறப்படுகிறது.

அமித்ஷா அதிரடி – அலறும் திமுக


அதேநேரம் ’அரசியல் பழிவாங்கல்’ என்கிற விமர்சனம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஆளும் அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் மீதும் மத்திய அமைப்புகள் பாய்ச்சல் காட்டுமாம்.
ஆக மொத்தத்தில் அடுத்த ஒரிரு வாரங்களில் மத்திய அமைப்புகளின் தமிழக ஆபரேஷன்தான் தேசிய அளவில் தலைப்புச் செய்தியாகவிருக்கிறது. இதற்கான திட்டங்கள் டெல்லியில் மிகத் துல்லியமாக வகுக்கப்பட்டு வருகின்றன. ’’டிசம்பர் 7ல் வேல் யாத்திரை நிறைவடையும்போது திமுகவிற்கு எதிரான சூரசம்ஹாரம் தொடங்கும்’’ என பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு’’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.