விரைவில் அமித்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்; எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை

 

விரைவில் அமித்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்; எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை

இந்தியாவில் பல அரசியல் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை போல, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாதிக்கப்பட்டார். அவர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில், தன்னை தனிமை படுத்திக் கொண்டதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைவதற்கு முன்னரே அவர் குணமடைந்து விட்டதாக பாஜக எம்பி தெரிவித்த நிலையில், ஆனால் அதற்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு , அமித்ஷா குணமடைந்து விட்டதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

விரைவில் அமித்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்; எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை

இதனையடுத்து கடந்த 17 ஆம் தேதி மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதிக்கப்பட்டார். கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் அவர் ஏன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என கேள்வி எழுந்தது. அவர் உடல் சோர்வு, உடல் வலியால் அவதிப்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் இருந்த படியே தனது பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவனை விளக்கம் அளித்தது. இந்த நிலையில் விரைவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.