மதுரா மசூதி விவகாரத்தில் பா.ஜ.க. சம்பந்தபடவில்லை… அமித் ஷா விளக்கம்

 

மதுரா மசூதி விவகாரத்தில் பா.ஜ.க. சம்பந்தபடவில்லை… அமித் ஷா விளக்கம்

மதுராவில் கிருஷ்ணஜென்மபூமியில் உள்ள மசூதியை அகற்ற உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மத்திய அரசும், பா.ஜ.க.வும் சம்பந்தபடவில்லை என்று அமித் ஷா தெளிவுப்படுத்தியுள்ளார்.

பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும், தற்போதைய மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா முன்னணி செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது பீகார் சட்டப்பேரவை தேர்தல், மதுரா மசூதி வழக்கு உள்ளிட்ட கேள்விகளுக்கு அமித் ஷா பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 3ல் 2 பங்கு இடங்களை கைப்பற்றும். கூட்டணி கட்சியை (ஐக்கிய ஜனதா தளம்) காட்டிலும் பா.ஜ.க. அதிக இடங்களை வென்றாலும் நிதிஷ் குமார்தான் முதல்வர்.

மதுரா மசூதி விவகாரத்தில் பா.ஜ.க. சம்பந்தபடவில்லை… அமித் ஷா விளக்கம்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

இருந்தால் அல்லது இல்லை. பீகாரின் அடுத்த முதல்வராக நிதிஷ் குமார் இருப்பார். நாங்கள் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளோம், நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பீகார் மக்கள் இரட்டை என்ஜின் அரசாங்கத்தை பெறுவார்கள். ஒன்று பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்தியில். லோக் ஜன்சக்திக்கு நாங்கள் போதுமான இடங்களை அளித்தோம். ஆனால் அவர்கள் கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டார்கள். அது அவர்களின் முடிவு.

மதுரா மசூதி விவகாரத்தில் பா.ஜ.க. சம்பந்தபடவில்லை… அமித் ஷா விளக்கம்
மதுரா மசூதி

மதுராவில் கிருஷ்ணஜென்மபூமி அருகே உள்ள மசூதியை அகற்ற உத்தரவிடக்கோரி மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் மத்திய அரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்தவித தொடர்பு கிடையாது. ராமஜென்மபூமியும், இயக்கமும் கட்சியின் திட்டமாக இருந்தபோதிலும், மதுரா பிரச்சினையில் பா.ஜ.க. சம்பந்தப்படவில்லை.