ஒரு துறை 2 ஆண்டுகளாக இருப்பது கூட தெரியாத தலைவரை மக்கள் விரும்புகிறார்களா? அமித் ஷா கேள்வி

 

ஒரு துறை 2 ஆண்டுகளாக இருப்பது கூட தெரியாத தலைவரை மக்கள் விரும்புகிறார்களா? அமித் ஷா கேள்வி

ஒரு துறை 2 ஆண்டுகளாக இருப்பது கூட தெரியாத தலைவரை (ராகுல் காந்தி) விரும்புகிறீர்களா என்று மக்களிடம் கேட்க விரும்புகிறேன் என்று ராகுல் காந்தியை அமித் ஷா தாக்கி பேசினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காரைக்காலில் பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: புதுச்சேரியில் முதல்வர் வி.நாராயணசாமி தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு மத்திய அரசின் ரூ.15 ஆயிரம் கோடி நிதியிலிருந்து காந்தி குடும்பத்துக்கு கட் மணி (கமிஷன்) வழங்கியது. மேலும் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் அற்ப அரசியலில் ஈடுபட்டது.

ஒரு துறை 2 ஆண்டுகளாக இருப்பது கூட தெரியாத தலைவரை மக்கள் விரும்புகிறார்களா? அமித் ஷா கேள்வி
அமித் ஷா

காங்கிரஸ் கட்சியிலிருந்து பல மூத்த தலைவர்கள் வெளியேறி வருகின்றனர். ஏனென்றால் அந்த கட்சி வம்ச அரசியல் காரணமாக நாடு முழுவதும் சரிவை சந்தித்து வருகிறது. மீன்வளத்துறை தனி அமைச்சகம் 2 ஆண்டுகளாக (2019 முதல்) உள்ளது என்பதை அறியாத ஒரு தலைவரை (ராகுல் காந்தி) அவர்கள் விரும்புகிறார்களா என்பதை மக்களிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். 2019ல் மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் தொடங்கியபோது ராகுல் காந்தி விடுமுறையில் இருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒரு துறை 2 ஆண்டுகளாக இருப்பது கூட தெரியாத தலைவரை மக்கள் விரும்புகிறார்களா? அமித் ஷா கேள்வி
காங்கிரஸ்

ராகுல் காந்தி அண்மையில் புதுச்சேரி மற்றும் கேரளாவில் மீனவர் சமுதாய மக்கள் மத்தியில் பேசுகையில், டெல்லியில் நில விவசாயிகளுக்கு அமைச்சகம் இருக்க முடியும் என்றால், கடல் விவசாயிகளுக்கு ஏன் அவ்வாறு இல்லை என்று பேசியிருந்தார். அதாவது மத்தியில் மீன்வளத்துறைக்கு அமைச்சகம் உள்ளநிலையில், மீன்வளத்துறைக்கு அமைச்சகம் இல்லை என்று கூறியதை மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் கிண்டல் செய்து இருந்தார். தற்போது அமித் ஷாவும் கிண்டல் அடித்துள்ளார்.