திருவள்ளுவர் தினம்… அமித் ஷா வாழ்த்து… பின்னணி என்ன?

 

திருவள்ளுவர் தினம்… அமித் ஷா வாழ்த்து… பின்னணி என்ன?

திருவள்ளுவர் தினத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இதுபோன்ற தமிழ் மண்ணின் பெருமைகளைப் பேசினால் தமிழ்நாட்டில் தாமரையை மலரவைக்க முடியும் என்று திட்டம் பாஜகவுக்கு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

வாழ்வின் அனைத்து விழுமியங்களையும் இரண்டு அடிகளில் உள்ளடக்கி திருக்குறளை வடித்தவர் திருவள்ளுவர். அதனால் தான் திருக்குறள் உலகப் பொதுமறை என்று பெயர் பெற்றது.

திருவள்ளுவர் தினம்… அமித் ஷா வாழ்த்து… பின்னணி என்ன?

குறளின் சிறப்பு கருதி திருவள்ளுவரின் சிலையை 133 அடியில் கன்னியாகுமரியில் நிறுவினார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. சென்னையில் வள்ளுவர் கோட்டத்தையும் அமைத்து திருவள்ளுவருக்கு புகழ் சேர்த்தார்.

அவரைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 2ஆம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தத் தினத்தில் வள்ளுவரின் சிறப்பு குறித்துப் பேசி அவரது சிலைக்கு மாலை அணிவிப்பார்கள். அந்த வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா திருவள்ளுவர் தினத்திற்கு தனது அஞ்சலியை செலுத்தியிருக்கிறார்.

திருவள்ளுவர் தினம்… அமித் ஷா வாழ்த்து… பின்னணி என்ன?

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட்டில், “திருவள்ளுவர் தினத்தில் புகழ்பெற்ற திருவள்ளுவருக்கு எனது அஞ்சலி. சமூகம், அரசியல், தத்துவம், ஆன்மீகம் ஆகியவற்றில் காலந்தொட்டு பலதரப்பட்ட மக்களை அவர் கருத்தால் கவர்ந்துள்ளார். நமது தமிழ் இலக்கியத்திற்கு திருவள்ளுவர் செய்த பங்களிப்புக்காக அவர் என்றென்றும் நினைவு கூறப்படுவார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்துக்கள் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதாக குற்றச்சாட்டு எழுந்துவந்தது. இச்சூழலில் அமித் ஷா திருவள்ளுவர் தினத்திற்கு அஞ்சலி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, பிரதமர் மோடி தனது ட்வீட்டில் இந்தியாவிலுள்ள அனைத்து இளைஞர்களும் திருக்குறளைப் படிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

தமிழ்நாட்டில் ஆழமாக காலூன்ற பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு பாஜக தலைவர்கள் தமிழ் மண்ணின் பெருமைகளையும் அடையாளங்களையும் தொடர்ச்சியாகப் பேசிவருகின்றனர். அந்தக் கோணத்தில் தான் அமித் ஷா-மோடியின் திருவள்ளுவர் அஞ்சலியைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

திருவள்ளுவர் தினம்… அமித் ஷா வாழ்த்து… பின்னணி என்ன?

ஏற்கனவே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தபோது புறநானூற்று பாடலை உதாரணமாகக் கூறினார். இதேபோன்று தமிழர்களுக்கு உயர் பதவியைக் கொடுப்பதன் மூலம் தமிழ் மக்கள் மனதில் தாமரைக்கான இடத்தைப் பிடிக்க முயன்று வருகின்றனர்.

சிவன் இஸ்ரோ தலைவரானது, தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநரானது என குறிப்பிட்டுச் சொல்லலாம். மோடி-அமித் ஷா கூட்டணியின் ‘ஆபரேஷன் தமிழ்நாடு’ திட்டம் வெல்லுமா? தாமரை கருகுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.