குஷ்புவுக்காக களத்தில் இறங்கும் அமித்ஷா…வசப்படுமா ஆயிரம் விளக்கு?

 

குஷ்புவுக்காக களத்தில் இறங்கும் அமித்ஷா…வசப்படுமா ஆயிரம் விளக்கு?

மத்திய அமைச்சர் அமித் ஷா, ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குஷ்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ,ஜேபி நட்டா ,மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் தமிழகத்தில் முகாமிட்டனர், அந்தவகையில் நேற்று அமித் ஷா தமிழகத்திற்கு வந்தார்.

குஷ்புவுக்காக களத்தில் இறங்கும் அமித்ஷா…வசப்படுமா ஆயிரம் விளக்கு?

நேற்றிரவு சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோத் பி செல்வத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து இன்று காலை 10 மணி அளவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பரப்புரை செய்ய உள்ளார். திறந்த வேனில் பாண்டிபஜார் நோக்கி பேரணியாக செல்ல உள்ள நிலையில் அவர் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.

குஷ்புவுக்காக களத்தில் இறங்கும் அமித்ஷா…வசப்படுமா ஆயிரம் விளக்கு?

பின்னர் தூத்துக்குடி செல்லும் அவர் ராமநாதபுரம், திருநெல்வேலி நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.அமித் ஷாவின் வருகையை ஒட்டி திருநெல்வேலியில் சுமார் 1500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவை பிரச்சாரம் நாளை இரவு 7 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சார பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்