காத்திருக்கும் மத்திய அமைச்சர் பதவி?…. டெல்லி சென்ற ஜோதிராதித்ய சிந்தியா..

 

காத்திருக்கும் மத்திய அமைச்சர் பதவி?…. டெல்லி சென்ற ஜோதிராதித்ய சிந்தியா..

ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு அமைச்சரவை பதவி கிடைக்கும் என்று யூக செய்திகள் வலம் வரும் நிலையில், அவர் நேற்று மாலை டெல்லி சென்று முகாமிட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவையில் வெற்றி பெற்று ஆட்சியை காங்கிரஸ் பிடித்தது. காங்கிரசின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. இதனால் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தவருக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமை முதல்வர் பதவியை கமல்நாத்துக்கு வழங்கியது. சரி மாநில காங்கிரஸ் தலைவர் பதவியாவது கிடைக்கும் என எதிர்பார்த்தவருக்கு அதுவும் கிடைக்காமல் போனது.
மேலும், கமல்நாத்துக்கும், சிந்தியாவுக்கும் மோதல் நிலவியது. இதனையடுத்து யாரும் எதிர்பாராத வண்ணம் சிந்தியா பா.ஜ.க.வில் இணைந்தார். மேலும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

காத்திருக்கும் மத்திய அமைச்சர் பதவி?…. டெல்லி சென்ற ஜோதிராதித்ய சிந்தியா..
கமல் நாத்

இதனையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கமல் நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. மத்திய பிரதேசத்தில் மீண்டும் தாமரை மலர காரணமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் (எம்.பி.) பதவியை பா.ஜ.க. தலைமை வழங்கியது. மேலும் அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்படலாம் என பேச்சு அடிப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி தனது அமைச்சரவை விரிவாக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவுடன் அடிக்கடி சந்திப்பை நடத்தி வந்தார்.

காத்திருக்கும் மத்திய அமைச்சர் பதவி?…. டெல்லி சென்ற ஜோதிராதித்ய சிந்தியா..
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

இதனையடுத்து மோடி தனது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்போகிறார் என்று பேச்சு அடிப்பட்டது. மேலும் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என கூறப்பட்டது. தற்போது நாளை மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று மாலை இந்தூரிலிருந்து டெல்லிக்கு சென்றார். இதனால் அவருக்கு அமைச்சரவை இடம் கிடைப்பது உறுதியாக உள்ளதாக பேசப்படுகிறது. ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசில் இருந்தபோது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1 அரசாங்கத்தில் மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சராக இருந்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி-2 அரசாங்கத்தில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சராகவும் பின்பு மத்திய மின்சாரத்துறை அமைச்சராக (தனி பொறுப்பு) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.