கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்க ‘அமெரிக்கா மறுப்பு’!

 

கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்க ‘அமெரிக்கா மறுப்பு’!

நாடு முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிரான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. குறுகிய காலகட்டத்திலேயே இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இவை மிக வீரியமிக்கது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களும் செலுத்தி கொண்டவர்களுக்கு வைரஸின் பாதிப்பு குறைவாக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்க ‘அமெரிக்கா மறுப்பு’!

இந்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால அனுமதிக்காக பயன்படுத்த அமெரிக்கா மறுத்துள்ளது. செயலிழக்கப்பட்ட வைரஸ் பிளாட்பார்மில் இருந்து உருவாக்கப்படும் கோவாக்சினை அவசர கால அனுமதிக்காக பயன்படுத்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான அக்குஜென் நிறுவனம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருந்தது.

கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்க ‘அமெரிக்கா மறுப்பு’!

அதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம், போதுமான தகவல்கள் இல்லை எனக் கூறி அனுமதி வழங்க மறுத்துள்ளது. இந்த மருந்து பாதுகாப்பான ஒன்று என்பதை நிரூபிக்க கூடுதல் தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. மருந்தின் செயல் திறனை அறிந்து கொள்வதற்காக கூடுதல் தகவல்களை கேட்டிருப்பதாக தெரிகிறது.