“உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிரடி விலகல்” நடவடிக்கையைத் துவக்கியது அமெரிக்கா!

 

“உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிரடி விலகல்”  நடவடிக்கையைத் துவக்கியது அமெரிக்கா!

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் உலக சுகாதார நிறுவனம் இயங்கி வருகிறது. முதன் முதலாக சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் மற்ற நாடுகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடிய வகை கொரோனா வைரஸ் மனிதர்களிடையே பரவும் தன்மை கொண்டது என்பதைச் சீனா மறைத்து என்றும் கொரோனா பரவல் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் எந்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளையும் வெளியிடவில்லை எனவும் சீனாவுக்கு ஆதரவாக WHO செயல்படுவதாகவும் அமெரிக்கா தொடர்ந்து புகார்களை முன்வைத்து வருகிறது.

“உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிரடி விலகல்”  நடவடிக்கையைத் துவக்கியது அமெரிக்கா!

ஆனால், அமெரிக்காவின் இந்த கருத்துக்கு உலக சுகாதார நிறுவனம் மறுப்பு தெரிவித்தது. இவ்வாறு புகார்களை அமெரிக்கா முன் வைத்துக் கொண்டே வந்த நிலையில், ஒரு கட்டத்தில் WHOக்கு நிதியை நிறுத்தி விடுவோம் என அமெரிக்கா மிரட்டல் விடுத்தது. அதுமட்டுமில்லாமல் விரைவில் கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்க வேண்டும் என்றும் WHOக்கு கெடு விதித்தது.

இந்நிலையில் WHOவில் இருந்து விலக அமெரிக்கா முறையான நடவடிக்கையைத் தொடங்கி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க வெளியுறவுக் கொள்கை கமிட்டியின் மூத்த செனட்டர் Robert Menendez தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப் படுத்தியுள்ளார்.