நோயாளியுடன் காத்திருந்த ஆம்புலன்ஸ்… ரயிலை நிறுத்தி வழிவிட்ட அதிகாரி…

 

நோயாளியுடன் காத்திருந்த ஆம்புலன்ஸ்… ரயிலை நிறுத்தி வழிவிட்ட அதிகாரி…

மதுரை

ஆம்புலன்சுக்கு வழிவிட ரயிலை நிறுத்தி கேட்டை திறந்துவிட்ட ரயில் நிலைய அதிகாரியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ரயில் நிலையம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில் இன்று ரயில் வருவதற்காக கேட் மூடப்பட்டு இருந்தது. இதனால் விமான நிலைய சாலையில் ஏராளமான வாகனங்கள் காத்திருந்தன. அப்போது, விபத்தில் சிக்கிய நபரை ஏற்றிசென்ற ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் சிக்கிகொண்டது. சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக கேட் திறக்கப்படாததால் அங்கிருந்த சிலர் இதுகுறித்து திருமங்லம் ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் அளித்தனர்.

நோயாளியுடன் காத்திருந்த ஆம்புலன்ஸ்… ரயிலை நிறுத்தி வழிவிட்ட அதிகாரி…

இதனை அடுத்து அந்த வழியாக செல்லவிருந்த ரயிலை, ரயில் நிலையத்திலேயே நிறுத்திவைத்து, உடனடியாக கேட்டை திறக்க செய்தார். இதனை அடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் புறப்பட்டு சென்றது. இதனை தொடர்ந்து ரயில்வே கேட் மூடப்பட்டு, ரயில் கடந்துசென்றது. நோயாளியின் நிலையை எண்ணி ரயிலை நிறுத்தி கேட்டை திறந்துவிட்ட ரயில்நிலைய அதிகாரியின் மனிதநேயமிக்க செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.