அமேசனுக்கு லட்சம் கோடி அபராதமா? – காரணம் இதுதான்

 

அமேசனுக்கு லட்சம் கோடி அபராதமா? – காரணம் இதுதான்

உலகம் முழுவதும் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்துவரும் மிகப் பெரிய நிறுவனம் அமேசான். அதுவும் கொரோனா பரவலால் லாக்டெளன் அறிவிக்கப்பட்டதும், ஆன்லைன் ஷாப்பிங் என்பது பரவலாக அதிகரித்து விட்டது. காய்கறி, மளிகை சாமான்கள் உட்பட ஆன்லைன் மூலம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்தியாவிலும் அமேசான் நிறுவனம் கால் பதித்து, விற்பனையில் கொடி கட்டிப் பறக்கிறது. தீபாவளி மற்றும் பண்டிகைக்காலங்களில் சிறப்புத் தள்ளுபடி அளித்து, இதுவரை ஆன்லைன் பர்சேஸிங்கில் பழக்கம் இல்லாதவர்களைக்கூட தங்களை நோக்கி இழுக்க முயற்சியில் ஈடுபடுகிறது.

அமேசனுக்கு லட்சம் கோடி அபராதமா? – காரணம் இதுதான்

இந்நிலையில் அந்நிய செலவாணி தொடர்பான சட்டங்களை அமேசான் நிறுவனம் முறையாகக் கடைபிடிக்கவில்லை. பல விதிமீறல்கள் நடந்திருக்கின்றன என்ற குற்றசாட்டு அமேசான் மீது எழுந்தது. இதன் எதிரொலியாக, இந்தியாவின் அனைத்திந்திய வணிகர்கள் கூட்டமைப்பு மிக முக்கியமான கோரிக்கையை விடுத்துள்ளது.

அந்நிய செலவாணி சட்டமீறல்களில் ஈடுபட்ட அமேசான் நிறுவனத்திடமிருந்து 1,45,000 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்ய வேண்டும் என வணிகர்கள் கூட்டமைப்பு அழுத்தாகக் கூறியிருக்கிறது.

அமேசனுக்கு லட்சம் கோடி அபராதமா? – காரணம் இதுதான்

இந்தப் பிரச்சனையில் தனது விளக்கத்தை அமேசன் நிறுவனம் இன்னும் அளிக்க வில்லை. அப்படி அளிக்கும்பட்சத்தில் இந்தச் சிக்கல் அடுத்த கட்டத்திற்குச் செல்லும்.