ஒரு நிமிடத்தில் அமேசானுக்கு கிடைக்கும் வருமானம்… வாயை பிளக்க வைக்கும் டேட்டா!

ஒரு நிமிடத்தில் அமேசானுக்கு கிடைக்கும் வருமானம்… வாயை பிளக்க வைக்கும் டேட்டா!

நாம் அனைவரும் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏராளமான நிறுவனங்கள் நமக்கு சேவைகளை அளித்தாலும் உலகம் முழுவதும் அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சி வருகின்றன. கூகுள், அமேசான், பேஸ்புக், ஆப்பிள், மைக்ரோசாப்ட் ஆகிய ஐந்து நிறுவனங்களே மக்களுக்கு நன்கு பரிட்சயமான தொழில்நுட்ப நிறுவனங்களாக இருக்கின்றன. இவற்றை சுருக்கி GAFAM என்றும் அழைக்கிறார்கள். இ-காமர்ஸ் வர்த்தகத்தில் இந்த ஐந்து நிறுவனங்களைத் தவிர யாரும் பெரிதாக சாதிக்க முடியவில்லை.

ஒரு நிமிடத்தில் அமேசானுக்கு கிடைக்கும் வருமானம்… வாயை பிளக்க வைக்கும் டேட்டா!

இச்சூழலில் இந்த நிறுவனங்கள் ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு தொகை வருமானம் பார்க்கின்றன என்ற புள்ளிவிவரங்கள் வெளியாகியிருக்கின்றன. புள்ளிவிவரங்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகமாக இருக்கிறது. இந்த ஐந்தில் அமேசான் நிறுவனமே டாப்பில் உள்ளது. அமேசான் நிறுவனம் ஒரு நிமிடத்திற்கு 8.37 லட்சம் டாலர் அளவிற்கு சம்பாதிக்கிறது. இந்திய மதிப்பில் 6 கோடியே 16 லட்சத்து 48 ஆயிரத்து 421 ரூபாய்.

ஒரு நிமிடத்தில் அமேசானுக்கு கிடைக்கும் வருமானம்… வாயை பிளக்க வைக்கும் டேட்டா!

2. ஆப்பிள் – 5.8 கோடி ரூபாய்

3.கூகுள் – 3.14 கோடி ரூபாய்

4.மைக்ரோசாப்ட் – 2.36 கோடி ரூபாய்

5.பேஸ்புக் – 1.48 கோடி ரூபாய்