அமேஸ்ஃபிட் ஸ்ட்ரட்டோஸ் 3 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

 

அமேஸ்ஃபிட் ஸ்ட்ரட்டோஸ் 3 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

டெல்லி: அமேஸ்ஃபிட் ஸ்ட்ரட்டோஸ் 3 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமேஸ்ஃபிட் ஸ்ட்ரட்டோஸ் 3 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 80 வித்தியாசமான ஸ்போர்ட்ஸ் மோடுகள், வட்ட வடிவ டயல், டிரான்ஸ்ப்ளக்டிவ் டிஸ்பிளே ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இத்துடன் 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட், 14 நாட்கள் பேட்டரி திறன் ஆகிய அம்சங்களும் உள்ளன. இன்று முதல் இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

இதன் விலை ரூ.13,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஃபிளிப்கார்ட் மற்றும் அமேஸ்ஃபிட் இந்தியா ஆகிய தளங்களில் இந்த வாட்சை வாங்க முடியும். கருப்பு நிற பட்டை இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் 1.3 இன்ச் வட்ட வடிவ டயல், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சம், நான்கு பட்டன்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டயல், சிலிகான் பட்டை, 512 எம்.பி ரேம், 2 ஜிபி உள்ளடக்க மெமரி, ஜிபிஎஸ் போன்ற இன்னும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.