அமர்நாத் யாத்திரை ஜூலை 21 முதல் தொடக்கம் – 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை

 

அமர்நாத் யாத்திரை ஜூலை 21 முதல் தொடக்கம் – 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை

பஹல்கம்: இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ஜூலை 21-ஆம் தேதி தொடங்குகிறது.

ஜம்மு-காஷ்மீரில் கடல் மட்டத்திலிருந்து 3,880 மீட்டர் உயரத்தில் இமயமலையில் அமர்நாத் குகை கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வார்கள். கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக இந்த முறை யாத்திரையின் நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஆண்டு அமர்நாத் யாத்திரை 15 நாட்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ அமர்நாத்ஜி ஆலய வாரிய அதிகாரிகள் இதை தெரிவித்தனர். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. யாத்திரைக்கான ‘பிரதம் பூஜை’ நேற்று இங்கு நடைபெற்றது.

அமர்நாத் யாத்திரை ஜூலை 21 முதல் தொடக்கம் – 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை

சாதுக்களைத் தவிர 55 வயதுக்கு குறைவான பக்தர்களுக்கு மட்டுமே இந்தாண்டு அமர்நாத் யாத்திரையில் அனுமதி வழங்கப்படுகிறது. இந்தாண்டு யாத்திரையை மேற்கொள்ள உள்ள பக்தர்கள் அனைவரும் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சாதுக்கள் தவிர அனைத்து பக்தர்களும் யாத்திரைக்காக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அந்த 15 நாட்களும் காலையிலும் மாலையிலும் அமர்நாத் கோவிலில் நடத்தப்படும் ஆரத்தி நிகழ்வு,  நாடு முழுவதும் உள்ள பக்தர்களுக்காக நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.